காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் கூட தடை: தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த பொது முடக்கம், பல்வேறு விதமான தளர்வுகளுடன் ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்படுகிறது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த பொது முடக்கம், பல்வேறு விதமான தளர்வுகளுடன் ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்படுகிறது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே, கொரோனா தொற்று (Corona virus) பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில், கடற்கரைகள் மற்றும் இதர பொது இடங்களில், 2021 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொங்கல் திருநாளை அடுத்து வரும் காணும் பொங்கல் அன்று, அதிக அளவில் மக்கள் கடற்கரைகளில் கூடுவார்கள், இதனால், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதி காணும் பொங்கல் (Pongal) அன்று மட்டும் கடற்கரைக்கு பொதுமக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், சமூக கூடங்கள் மற்றும் விளையாட்டிற்கான வளாகங்களில், 50% என்ற அளவில் அல்லது அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இந்த அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை அரசியல் கூட்டங்களுக்கும் பொருந்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு மெரினா (Marina) கடற்கரை கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் மூடப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு பிறகு டிசம்பர் 14ம் தேதி முதல் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வழிபாட்டு இடங்களுக்கு வழங்கப்பட்ட தரிசன நேரத்திற்கான தடைகள் முழுமையாக நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ALSO READ | ISRO தலைவர் சிவனின் பதவிக்காலத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR