சென்னை: கொரோனா வைரசுக்கு (Corona Virus) நேர்மறையாக சோதிக்கப்பட்ட 48 வயதான ஆண் நோயாளியின் கடுமையாக சேதமடைந்த நுரையீரல் வெற்றிகரமாக சென்னை மருத்துவமனையின் மருத்துவர்களால் மாற்றப்பட்டது. அவர் ஒரு இருதரப்பு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை (Lung Transplant) மேற்கொண்டார் என்று தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு COVID-19 நேர்மறை நோயாளிக்கு ஆசியாவில் செய்யப்பட்டுள்ள முதல் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையாகும் இது. மேலும் லாக்டௌன் தொடங்கியதிலிருந்து இந்த மருத்துவமனையில் நடந்துள்ள இரண்டாவது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும்.


டெல்லியைச் சேர்ந்த நோயாளிக்கு COVID -19 தொற்றும் நுரையீரல் தொற்றும் இருந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது. அவர் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒன்றரை மாதத்தில், கோவிட் -19 தொடர்பான ஃபைப்ரோஸிஸ் காரணமாக அவரது நுரையீரல் கடுமையாக சேதமடைந்தது.


எம்.ஜி.எம் ஹெல்த்கேர் படி, நோயாளி ஜூலை 8 அன்று கொரோனா வைரஸுக்கு நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டார். மேலும் நுரையீரலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்தது.


அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவரது ஆக்சிஜன் செறிவு குறைந்துவிட்டதால், ஜூன் 20 அன்று அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். வென்டிலேட்டர் ஆதரவு இருந்தபோதிலும் அவரது நிலை தொடர்ந்து மோசமடைந்தது. ஜூலை 20 ம் தேதி காசியாபாத்தில் இருந்து சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார்.


ALSO READ: புற்றுநோய்த் தலைநகரமாகும் சென்னை; புகையிலை, மதுவை ஒழிக்க வேண்டும்: PMK


"அதிகபட்ச வெண்டிலேட்டர் கேரிலும் அவரது நுரையீரல் நிலை தொடர்ந்து மோசமடைந்தது. மேலும் அவர் ஜூலை 25 அன்று ஒரு மாதத்திற்கும் மேலாக ECMO-வில் வைக்கப்பட்டார். நல்ல உபகரணங்களைக் கொண்ட ICU-வில் கூட இத்தகைய நோயாளிகளை பராமரிப்பது மிகக் கடினமாகும்.” என்று எம்ஜிஎம் ஹெல்த்கேர் கூறியது.


மாற்று நுரையீரல்களைப் பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். அது ஆகஸ்ட் 27 அன்று செய்யப்பட்டது. மாற்று அறுவை சிகிச்சைக்கு இருதய அறிவியல் தலைவரும் இயக்குநருமான டாக்டர் கே. ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் இதய மற்றும் நுரையீரல் மாற்று திட்டத்தின் இயக்குநர் மற்றும் அவரது குழுவினர் தலைமை தாங்கினர்.


மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி ஐ.சி.யுவில் நல்ல முன்னேற்றத்தைக் காட்டுகிறார் என்று எம்ஜிஎம் ஹெல்த்கேர் கூறியது னார்.


"நோயாளியின் இரு மாற்று நுரையீரல்களும் நன்றாக வேலை செய்ததால், நாங்கள் ECMO ஆதரவை அகற்றினோம். இப்போது அவரது உடல்நிலை நிலையாக உள்ளது" என்று இதய மற்றும் நுரையீரல் மாற்று மற்றும் இயந்திர சுழற்சி ஆதரவு நிறுவனத்தின் இணை இயக்குனர் சுரேஷ் ராவ் தெரிவித்தார்.


"கோவிட் நிமோனியாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அனைத்து மருந்துகளும் இயந்திர வென்டிலேட்டர்களும் நேர்மறையான விளைவுகளை அளிக்க முடியாத போது, துவக்கத்திலேயே ECMO-வின் உதவியை நாம் பயன்படுத்தினால் அது உயிர் காக்கும் முறையாக இருக்கக் கூடும்" என்று நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் தலையீட்டு நுரையீரல் மற்றும் மார்பு மருத்துவத்தின் மருத்துவ இயக்குநர் மற்றும் ஆலோசகர் ஜிண்டால் கூறினார்.


காலப்போக்கில், நோயாளி தானாக மேம்படுகிறாரா அல்லது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை அவருக்கு உள்ளதா என்பதை அவரது உடல் நல முன்னேற்றம் நமக்குத் தெரிவிக்கும். COVID தொற்றிலிருந்து மீண்டு வந்து, சேதமடைந்த நுரையீரல் காரணமாக சுவாச முடக்கம் ஏற்படும் நபர்களுக்கு, ரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒரு சிறந்த மருத்துவ முறையாக அமையலாம் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. 


ALSO READ: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை 15.7 லட்சமாக உயரும்..!