கொலை செய்யப்பட்ட திமுக வட்டச்செயலாளர் செல்வத்தின் மனைவி வெற்றி
Tamil Nadu Election Results: சமீபத்தில் கொலை செய்யப்பட்ட திமுக வட்டச்செயலாளர் செல்வத்தின் மனைவி சென்னை மாநகராட்சி 188 வார்டில் வெற்றி.
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. தற்போது திமுக வட்டச்செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா சென்னை மாநகராட்சி 188 வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
ஏன் திமுக வட்ட செயலாளர் கொலை செய்யப்பட்டார்?
செல்வத்தின் வீட்டின் அருகே கும்பலாக வந்தவர்கள், அவருக்கு சால்வை அணிவிப்பது போல் நடித்து, செல்வத்தை நெருங்கி, வெட்டிச் சாய்த்தனர். அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்த செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியதால், அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
8 பேர் கொண்ட கும்பல் செய்த கொலையால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுகவின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற உள்ள நபர் கொலை செய்யப்பட்ட விவகாரம், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்பட்ட செல்வம், மடிப்பாக்கம் 188வது வட்ட திமுக செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார். எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் சார்பில் 188வது வட்டத்தில் வேட்பாளராக போட்டியிட இருந்தவர் செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொலை செய்யப்பட்ட செல்வம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.
மேலும் படிக்க: சுயேச்சைகளின் கையில் கமுதி பேரூராட்சி 15ல் 14 வார்டுகளில் வெற்றி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது,. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: Crime: திமுக வட்ட செயலாளர் செல்வம் படுகொலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR