கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே பொதுமக்கள் வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. சில வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. ஆனாலும் அவைகள் சரிசெய்யப்பட்டன. மேலும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு காரணமாக மழை பெய்தது. இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இவை அனைத்தயும் மீறி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. 


தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். மேலும் நமது சிங்கரா சென்னையில் தான் குறைந்தபட்சமாக 55.27 சதவீத வாக்குகள் பதிவாகின.


மேலும் தள்ளிவைக்கப்பட்ட 2 தொகுதிகளுக்கும் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு மே 25-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு  5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.