தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதையடுத்து, தேர்தல் நடைபெற உள்ள இந்த 5 மாநிலங்களில் 295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது சட்டப்பேரவைத் (Assembly Elections) தேர்தல் நடைபெறும் 5 (தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம்) மாநிலங்களில் இதுவரை மொத்தம் ரூ.331 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் (Election Commission) தெரிவித்துள்ளது.


ALSO READ: TN Elections 2021 | தமிழகதில் ஏப்ரல் 6 ஆம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு


இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்,
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் மேற்கொண்ட தேர்தல் செலவின கண்காணிப்பு நடவடிக்கையில் கடந்த 16ம் தேதி வரை, ரூ.331 கோடி மதிப்பில் ரொக்க பணம், மது, இலவச பொருட்கள், தங்கம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


மேலும் தமிழகத்தில் (Tamil Nadu) மட்டும் ரூ.50.86 கோடி ரொக்கப் பணம், ரூ.1.32 கோடி மதிப்பிலான மது, ரூ.35 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள், ரூ.14.06 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள், ரூ.61.04 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் ரூ.127.64 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் மேற்கு வங்காளத்தில் ரூ.112.59 கோடி மதிப்புள்ள பொருட்களும், அசாமில் ரூ.63 கோடியே ரூ.75 லட்சமும், கேரளாவில் ரூ.21 கோடியே 77 லட்சமும், புதுச்சேரியில் ரூ.5 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


ALSO READ | இந்த முறை உண்மை பேசும் எனக்கு வாக்களியுங்கள்: அரவக்குறிச்சியில் அண்ணாமலை பிரச்சாரம்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR