ATM கொள்ளையர்களின் தலைவன் ஹரியானாவில் அதிரடி கைது
ஹரியானாவை சேர்ந்த சவுகத் அலி அங்கு வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் எஸ்பிஐ (SBI ATM) வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை நடந்து வந்தது. இந்த சம்பவத்தை செய்த கும்பல் ஹரியானாவை சேர்ந்தது என போலீசாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது.
இந்நிலையில் எஸ்பிஐ (SBI ATM) வங்கி ஏடிஎம் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ஹரியானாவுக்கு (Haryana) விரைந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களாக ஹரியானாவை சேர்ந்த அமீர் அர்ஷ், வீரேந்திர ராவத், நஜீம் உசேன் ஆகிய கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ALSO READ | ATM Machine: பணம் எடுக்க மட்டுமல்ல, பல்வேறு சேவைகளையும் வழங்கும் கற்பகவிருட்சம்
மேலும் அமீர் அர்ஷ், வீரேந்திர ராவத், நஜீம் உசேன் ஆகியோரை தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த கும்பலின் முக்கிய தலைவனான ஹரியானாவைச் சேர்ந்த சவுகத் அலி என்பவரை ஹரியானவில் வைத்து சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். நஜீம் உசேனின் ஜீப்பில் தான் சவுகத்அலி சென்னை வந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கும்பல் மட்டும் சென்னையில் மட்டும் ரூ. 17 லட்சத்தை கொள்ளை அடித்து தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சத்திற்கும் மேலாக இந்த கும்பல் கொள்ளையடித்து விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஹரியானாவில் கைதான கும்பல் தலைவன் சவுகத் அலியை சென்னை கொண்டு வந்து விசாரித்த பிறகு இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ALSO READ | ATM Withdrawals: ஏடிஎம்களின் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம் உயர்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR