ATM Withdrawal Limit Charges: நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக அதிகரித்துள்ளது. இதனால் மாநிலங்களில் பல கட்டுபாடுகள் விதிக்கபட்டு உள்ளது. அதன்படி நாடு முழுவதிலும் உள்ள வங்கிகள் குறைந்த நேரமே இயங்கி வருகின்றன. இதனால் மக்கள் பணம் எடுக்க ஏடிஎம்களை நம்பி உள்ளனர்.
இந்நிலையில் தற்போது வங்கி சாராத மாற்று வங்கியின் ஏடிஎம் (ATM Withdrwal) மையத்திலோ அல்லது ஏடிஎம் ஆபிரேட்டர்களின் மையத்திலோ பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank) அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய உத்தரவு வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | SBI customers alert: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கிய எச்சரிக்கை
வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 15 ரூபாயை தற்போது Interchange கட்டணமாக மாற்று வங்கி அல்லது ஏடிஎம் ஆப்பிரேட்டார்களுக்கு சம்மந்தப்பட்ட வங்கிகள் கட்டணமாக கொடுத்து வருகின்றனர். இதனை இனி வணிகள் 17 ரூபாய்க கொடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பணம் சாராத ஏடிஎம் பரிவர்த்தனைக்கான கட்டணம் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேசமயம் மாற்று வங்கி ஏடிஎம்களில் மூன்று இலவச பரிவர்த்தனை கொடுக்கப்படும். அதற்கு பிறகு கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் உயர்வை ஏடிஎம் பராமரிப்பு செலவை கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனையை கடந்தவுடன் 20 ரூபாய் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து வசூலித்து வருகிறது வங்கி. இதனை 21 ரூபாயாக வரும் வரும் ஜனவரி 1 முதல் இனி வங்கிகள் வசூல் செய்ய உள்ளது.
ALSO READ | இனி, Google Pay, Paytm செயலிகளை பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR