ATM Machine: பணம் எடுக்க மட்டுமல்ல, பல்வேறு சேவைகளையும் வழங்கும் கற்பகவிருட்சம்

வங்கிக்கு நேரடியாக போகாமலேயே, வங்கிச் சேவைகளை ஏ.டி.எம்களிலேயே பெறலாம். இது பலருக்கு தெரியவில்லை. ஏடிஎம் இயந்திரத்தின் பயன்பாடுகளை தெரிந்துக் கொள்ளுங்கள்....

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 12, 2021, 11:19 AM IST
  • பணம் எடுக்க மட்டுமல்ல, பல்வேறு சேவைகளையும் வழங்கும் ATM
  • இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தலாம்
  • மொபைல் ரீசார்ஜ் செய்யலாம்
ATM Machine: பணம் எடுக்க மட்டுமல்ல, பல்வேறு சேவைகளையும் வழங்கும் கற்பகவிருட்சம்  title=

ஏடிஎம் என்பது பணம் எடுக்கும் ஒரு இயந்திரம் என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால், பணம் எடுப்பதைத் தவிர, அதை மேலும் பலவிதங்களில் பயன்படுத்தலாம் என்பது பொதுவாக யாருக்கும் தெரிவதில்லை. வங்கிக்கு நேரடியாக போகாமலேயே, வங்கிச் சேவைகளை ஏ.டி.எம்களிலேயே பெறலாம்.

இதுபோன்ற பற்பல சேவைகளை வழங்குவதற்கு ஏற்றவாறு ATM இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஏடிஎம் இயந்திரத்தின் பயன்பாடுகளை தெரிந்துக் கொள்வோம்...

ஏடிஎம் இயந்திரத்தின் பயன்கள்: 

  1. வங்கிக் கணக்கில் இருக்கும் பண இருப்பைத் தெரிந்துக் கொள்ளலாம்
  2. காசோலை தேவை என்றால் காசோலை புத்தகத்திற்கு ஏடிஎம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். பிறகு காசோலை புத்தகம் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.
  3. வங்கிக் கணக்கின் மினி அறிக்கையை பெறலாம். 
  4. இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தலாம்
  5. மொபைல் ரீசார்ஜ் செய்யலாம். எஸ்பிஐ உட்பட பல வங்கிகள் தங்கள் ஏடிஎம்களில் இந்த வசதியை வழங்குகின்றன.
  6. வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை FD எனப்படும் நிலையான வைப்புத்தொகைக் கணக்காக மாற்றலாம்.  எவ்வளவு காலத்திற்கு பணத்தை FDயில் வைத்திருக்க விரும்புகிறோம் என்றத் தெரிவும் அதில் உண்டு.

Also Read | Tips to avoid Fraud: உங்கள் ஆதார் எண்ணில் வாங்கப்பட்ட சிம் கார்டில் மோசடியா?

  1. பணத்தை வேறொரு கணக்குக்கு மாற்ற விரும்பினால், அதை ஏடிஎம்மிலிருந்து செய்யலாம். 
  2. ஏடிஎம்மிலேயே மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் போன்ற பல பில்களை செலுத்தலாம். இந்த வசதி எஸ்பிஐ உட்பட பல வங்கிகளின் ஏடிஎம்களில் கிடைக்கிறது. 
  3. கிரெடிட் கார்டு பில்லையும் ஏடிஎம் மூலமாகவே செலுத்தலாம்.  
  4. பல ஏடிஎம்களில் வரி செலுத்தும் வசதியும் கிடைக்கிறது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி உள்ளிட்ட பல வங்கிகளின் ஏடிஎம்களில் இந்த வசதி உள்ளது. இதற்காக, உங்கள் வங்கியின் இணையதளத்தில் ஏடிஎம்மில் இருந்து வரி செலுத்துவதற்கு டெபிட் கார்டு பதிவு செய்யப்பட வேண்டும். வரி செலுத்தும்போது, ஏடிஎம் உங்களுக்கு SIN எண்ணைக் கொண்ட ஒரு சீட்டை வழங்கும். இந்த எண்ணை வங்கியின் இணையதளத்தில் 24 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Also Read | மொபைல் போர்டபிளிட்டி போல், இப்போது LPG போர்டபிளிடி, புக் செய்வது எப்படி..!!

  1. கோயில் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பினால், அதை ஏடிஎம் மூலமாகவும் செய்யலாம்.   சீரடி சாய்பாபா, திருப்பதி, பழநி, ராமகிருஷ்ணா மிஷன், காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகளை எஸ்பிஐ ஏடிஎம் மூலம் வழங்கலாம்.
  2. ஐசிஐசிஐ, எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகளின் ஏடிஎம்களில் பணத்தை டெபாசிட் செய்யலாம். ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை வைத்தோ, காசோலை மூலமோ டெபாசிட் செய்ய வேண்டும்.
  3. ஏடிஎம் மூலமாகவே மொபைல் வங்கி சேவைக்கு பதிவு செய்யலாம் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி போன்ற ஏடிஎம்களில் இத்தகைய வசதி கிடைக்கிறது.
  4. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்று. கடன் தேவை என்றால், அதற்காகவும் ஏடிஎம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வசதி ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஏடிஎம்களில் கிடைக்கிறது.

Also Read | ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டது ஊரடங்கு: புதிய தளர்வுகள் என்னென்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News