இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்
பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் செல்போனை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கல்லுக்குழி பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு அந்த சிறுமி மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை அடுத்து அந்த சிறுமியின் செல்போன் எண்ணைவைத்து தேடும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அந்த சிறுமி நாயுடுபுரத்தை சேர்ந்த பூசாரியிடம் பேசி இருந்தது தெரியவந்தது. அவரின் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிந்தன.
ALSO READ | கொரோனாவால் ரத்தாகும் திருமணங்கள்! திருக்கடையூர் ஆலயத்தில் திருமணங்கள் ரத்து
அதன்படி தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சிறுமி செல்போனில் முழுநேரமும் இருந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சரண்ராஜ் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலனை பார்க்க அவர் சென்ற போது ராமசுந்தர் சிறுமியிடம் விசாரித்துள்ளார்.
சிறுமி வெளியூர் செல்வதை அறிந்த அவர் இப்போது பஸ் இல்லை என கூறி அந்த சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமியை மீட்ட காவல்துறையினர் ராமசுந்தர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் செல்போனை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR