கொரோனாவால் ரத்தாகும் திருமணங்கள்! திருக்கடையூர் ஆலயத்தில் திருமணங்கள் ரத்து

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவிருந்த 148க்கும்  மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 7, 2022, 02:01 PM IST
  • கொரோனாவால் ரத்தாகும் திருமணங்கள்!
  • திருக்கடையூர் ஆலயத்தில் 148 திருமணங்கள் ரத்து
  • கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனாவால் ரத்தாகும் திருமணங்கள்! திருக்கடையூர் ஆலயத்தில் திருமணங்கள் ரத்து  title=

தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  வாரத்தில் கடைசி 3 நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதித்துள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி (Corona Guidelines) கோவிலில் நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உலகப்புகழ்வாய்ந்த  தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்த இத்தளத்தில் திருமணங்கள் நடைபெறுவது நல்லது என்பது நம்பிக்கை.

ALSO READ | இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க 

ஆயுள் விருத்தி வேண்டி 60 வயதிலிருந்து 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருமணங்கள் மற்றும் ஆயுள் ஹோமங்கள் இங்கு நடைபெறுவது வழக்கம்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி (Corona Guidelines) கோவிலில் நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெறுவதால், திருக்கடையூர் கோவிலில் நடைபெறவிருந்த திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன.

 தினந்தோறும் இங்கு நடைபெறும் திருமணங்களில் வெள்ளிக்கிழமையான இன்றும், சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் நடைபெறவிருந்த 148க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன.

தமிழக மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்கள் கூட்டம் இன்றி ஆலயம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதே போல் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில், பரிமளரெங்கநாதர் ஆலயம்;,  திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பெரிய கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை மூடப்பட்டு பக்தர்கள் இன்றி நித்தியபூஜை மட்டும் நடைபெறுவதால் போயில்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

ALSO READ | கள்ளக்காதலியை ஹோட்டலுக்கு அழைத்து சென்ற கணவன்; மனைவி செய்த அதிரடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News