அரூர் அருகே அரசு பேருந்தில் மாட்டு இறைச்சி  எடுத்து சென்ற பெண்ணை பாதி வழியில் இறக்கி விட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுனர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நவலை கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை என்ற 59 வயது பெண் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்டியல் இன சமூகத்தை  சேர்ந்த இவர், தினம்தோறும் அரூர் நகரத்திலிருந்து நவலை கிராமத்திற்கு சென்று மாட்டிறைச்சி விற்பனை செய்து வருபவர். அன்றாட வாழ்விற்காக மாட்டிறைச்சி எடுத்து சென்று வியாபாரம் செய்யும் அவர், வழக்கம்போல் மாட்டிறைச்சி வாங்கி கொண்டு அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார்.


பயணச்சீட்டு எடுக்க வந்த நடத்துனர் ரகு என்பவர், இந்த பேருந்தில் வரவேண்டாம் என எவ்வளவு முறை சொல்வது? இப்போது ஏன் வந்தாய் முதலில் பேருந்தை விட்டு கீழே இறங்கு என திட்டி, அரூர் மோப்பிரிப்பட்டி காட்டுப்பகுதியில் பேருந்தை நிறுத்தி இறங்கச் சொல்லி நிர்பந்தித்துள்ளார்.


அதற்கு அந்த மூதாட்டி இன்று ஒரு நாள் மட்டும் என்னை விட்டு விடுங்கள் இனி நான் கொண்டு வரமாட்டேன் என்று கெஞ்சியுள்ளார். அவரது கெஞ்சலை கேட்காமல் இறக்கிவிடும் பிடிவாதத்தில் இருந்து நடத்துனர் மாறாததால், தயவு செய்து என்னை அடுத்த பேருந்து நிறுத்தத்தில் கூட இறக்கி விடுங்கள் என்று நடத்துனரிடம் கேட்டுள்ளார். ஆனால், அதை பொறுப்பெடுத்தாமல் நடத்துனர் அந்த மூதாட்டியை பிடிவாதமாகஇறக்கிவிட்டு சென்றுள்ளார்.


மேலும் படிக்க - INDIA Alliance: 9 மாநிலங்களில் கூட்டணி, 290 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் முடிவு எனத் தகவல்


இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி உள்ள நிலையில், நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. இது குறித்து அறிந்த தருமபுரி மண்டல போக்குவரத்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.


பேருந்தின் நடத்துனர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமாரை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள போக்குவரத்து நிர்வாகம் விசாரணை மேற்கொள்கிறது. நடத்துனர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.


கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு போலயம் பள்ளி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், தற்போது அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்த வயதான மூதாட்டி ஒருவரை பாதி வழியில் இறக்கி விட்ட சம்பவம் அரங்கேறி உள்ள சம்பவம் மக்கள் மனதில் மாற்றம் வரவில்லை என்பதையே காட்டுகிறது.


மேலும் படிக்க | மாதம் ரூ.9,250 வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. உடனே படிக்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ