தொடர் விடுமுறை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு உள்ளுர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்து இருந்தனர். தோட்டக்கலை பணியாளர்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் படகு சவாரி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் மலை ரயில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதால் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்... 'சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே சரி' - இப்போது என்ன பிரச்னை?



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.  நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்த மலை ரயில் பாதை அடர் வனப்பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ள நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்து அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் என இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர்.



தற்போது கோடை வெயில் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.  காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்து வருகிறது.  இதனை சமாளிக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பலரும் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றனர்.  இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க இந்த பிரச்சனைகளை உடனே சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


@ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ