PM Modi Chennai Visit Traffic Diversion: சென்னை புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பது, சென்டரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல நிகழ்வுகளில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப். 8) சென்னை வருகிறார். இந்நிலையில், சென்னையில் சில சாலைகளில் செய்யப்படும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தகவலை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில்,"பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளிலும், ஐன்எஸ் அடையார் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலும், சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது என்பதை பயணிகளுக்கு தெரிவித்து கொள்ளப்படுகிறது. 


மேலும் படிக்க | ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்... 'சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே சரி' - இப்போது என்ன பிரச்னை?


மாலை 4 மணி முதல் 6 மணிவரை


பிரதமர் நரேந்திர மோடி, விவேகானந்தர் இல்லத்திற்கு வருகை தரும்போது, காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே. சாலைக்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து நடேசன் சாலை சந்திப்பில் ஐஸ் ஹவுஸ், ரத்ன கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பு வழியாக தொழிலாளர் சிலை அல்லது அண்ணாசாலைக்கு வலதுபுறம் திரும்பலாம்



போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்கள் தொழிலாளர் சிஸையில் இருந்து வாலாஜா சாலையில் அண்ணாசாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். தேவைப்பட்டால் வாகனங்கள் போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா பாயின்ட் வழியாக அண்ணாசாலை நோக்கி கொடி ஊழியர்கள் சாலையில் திருப்பி விடப்படலாம். இந்த மாற்று பாதையானது. மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுத்தப்படும்" என குறிப்பிட்டுள்ளது. 


மேலும், வணிக வாகனங்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 8 மணி வரை இடையிடையே திசைமாற்றம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. திசைமாற்றம் குறித்த தகவல்களை இங்கே காணலாம். 


வணிக வாகனங்கள் மாற்றிவிடப்படும்...


- அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.


- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் திருப்பி அண்ணாநகர், புதிய ஆவடி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.


- வெளியேறும் திசையில் செல்லும் வாகனங்கள் NRT புதிய பாலத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்டான்லி சுற்று, மின்ட் சந்திப்பு, மூலகொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப், வியாசர்பாடி வழியாகத் திருப்பி விடப்படும். 


- ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹண்டர் ரோடு, ஈவிகே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை அடையும் வகையில் திருப்பி விடப்பட்டு, நாயர் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.


- லேங்கஸ் கார்டன் சாலையில் இருந்து காந்தி இர்வின் மேம்பாலத்திற்கு வரும் கனரக வாகனங்களை ஈவிஆர் சாலையை அடைய உடுப்பி பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.


- கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரப்படும் கனரக வாகனங்கள் மந்தவெளி நோக்கி திருப்பிவிடப்படும்.


- அதிகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் சிலை முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலான மெரினா சாலையில் கூடுதல் ஆய்வு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்படும்.


மேலும், வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறும்,  இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்தவழக்குமாறும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டும் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஸ்டெர்லைட்: தூத்துக்குடிக்கு போய் பேசு முடியுமா? ஆர்என் ரவி பேச்சுக்கு கனிமொழி - உதயநிதியின் ரியாக்ஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ