உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (WTC Final 2023) ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோத இருக்கின்றன. ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டி இங்கிலாந்தில் இருக்கும் ஓவல் மைதானத்தில் விளையாடப்பட இருக்கிறது. இன்னும் குறுகிய நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி அனுபவமிக்க பிளேயரான ஆன்டி பிளவரை ஆலோசகராக நியமித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலிய அணி ஆலோசகர்


ஜிம்பாப்வேயின் முன்னாள் கேப்டனும், மிகச்சிறந்த பேட்ஸ்மேனுமான ஆண்டி ஃப்ளவரை திடீரென தங்களது அணியில் சேர்த்துக்கொண்டது ஆஸ்திரேலியா. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆலோசகராக ஆண்டி பிளவர் ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளார். திங்களன்று, ஆஸ்திரேலிய அணி ஆண்டி ஃப்ளவரின் மேற்பார்வையில் ஓவல் மைதானத்தில் பயிற்சி செய்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகும் ஆண்டி ஃப்ளவர் ஆஸ்திரேலிய அணியுடன் ஆலோசகராகத் தொடர்வார் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுண்ட்டவுன் ! ரோஹித் ஷர்மாவுக்கு குவியும் பாராட்டு


சிறந்த பேட்ஸ்மேன்



ஜிம்பாப்வே அணிக்காக 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆண்டி ஃப்ளவர், 51க்கு மேல் சராசரியாக 4794 ரன்கள் எடுத்துள்ளார். ஆண்டி ஃப்ளவர் அவரது சகாப்தத்தின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர். அதே நேரத்தில், ஃப்ளவர் டீம் இந்தியாவுக்கு எதிராக மொத்தம் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 94.83 சராசரியில் 1138 ரன்கள் எடுத்துள்ளார். ஆண்டி பிளவர் இதற்கு முன்பு இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பதால் அங்கிருக்கும் சூழ்நிலை நன்கு தெரிந்து வைத்திருப்பார். இதற்காக அவரை ஆலோசகராக்கியுள்ளது ஆஸ்திரேலியா.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி


ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஜெய்தேவ் உனத்கட்.


காத்திருப்பு வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்.


WTC இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:


பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் மற்றும் டேவிட் வார்னர்.


மேலும் படிக்க | கோப்பையை கையில் வாங்கியதும் தோனி செய்த காரியம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ