பெண் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்!
இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி செய்திகள்: தூத்துக்குடி செல்சினி காலனி 2வது தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சாரதி என்கிற பார்த்த சாரதி (35). ஆட்டோ டிரைவர். இன்று மதியம் 3 மணியளவில் அவரது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 2பேர் அவரிடம் தகராறு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அரிவாளை எடுத்து வெட்ட முயன்றபோது அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடியபோது துரத்தி சென்ற மர்மநபர்கள் அவரை சரமரியாக வெட்டியதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அவரது உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.
ALSO READ | கொலையா? தற்கொலையா? தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனும், சிறுமியும் சடலமாக மீட்பு
முன்னதாக சம்பவ இடத்தை நகர காவல் துணைகண்காணிப்பாளர் கணேஷ் பார்வையிட்டார். பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
பார்த்த சாரதியின் நண்பர் பன்னீர் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனை அவரது கணவர் கண்டித்துள்ளார்.
இந்த தகராறில் பார்த்தசாரதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | Crime News: தேனி: முன் விரோதம் காரணமாக வழக்கறிஞர் வெட்டிக் கொலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR