தேனி: தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வழக்கறிஞரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் சந்தேகத்திற்குரிய 4 பேரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் நகரை சேர்ந்தவர் வீரனை தேவர். இவரது மகன் மதன்குமார். 30 வயதான மதன்குமார், உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இன்று மதியம் மதன்குமார் தனது இருசக்கர வாகனத்தில் உத்தமபாளையம் சந்தை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, காரில் அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், வழக்கறிஞர் மதன்குமாரை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.
READ ALSO | காஞ்சிபுரத்தில் பட்டா கத்தியுடன் கடைக்குள் ரவுடிகள் அட்டகாசம்: பொதுமக்கள் அதிர்ச்சி
ஆயுதங்களால் தாக்கப்பட்டு, பலத்த காயமடைந்த மதன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் (Murder of Lawyer). மதன்குமார் உயிரிழந்துவிட்டார் என்பதைத் தெரிந்துக் கொண்ட கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலையான மதன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மதன்குமாரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.
மதன்குமார் ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் (Police Enquiry) மதன் குமாருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்து வருவது தெரியவந்தது. சொத்துத் தகராறு தொடர்பான மோதலில் கடந்த ஆண்டு ரஞ்சித் என்பவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
ரஞ்சித்தின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக மதன்குமார் படுகொலை செய்யப்பட்டிருப்பது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக 4 பேரை காவலில் எடுத்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
READ ALSO | ஆள் கடத்தலில் கைதான அதிமுக பிரமுகர் - நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அனுமதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR