பொங்கல் விழாவையொட்டி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்த இப்போட்டியில் 825 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட. 600க்கும் மேற்பட்ட காளையர்கள் களமிறங்கினர். காலை முதலே விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்ததது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர் கார்த்திக் மற்றும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரண்டு கார்கள் பரிசாக கொடுக்கப்பட்டன. அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக இந்த பரிசுகளை வழங்கினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்


அத்துடன் களத்தில் சிறப்பாக விளையாடி காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசுகள் பரிசாக கொடுக்கப்பட்டது. அமைச்சர் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் சார்பில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்கள் என்று தெரிந்தவுடன் உடனடியாக தங்க காசு பரிசாக அறிவிக்கப்பட்ட காளையர்கள், காளைக்கு கொடுக்கப்பட்டது. குறிப்பாக பெண்கள், திருநங்கைகள் கொண்டு வந்த காளைகளுக்கு தங்க காசு உறுதியாக கொடுக்கப்பட்டது. களத்தில் அவிழ்த்துவிடப்பட்ட அனைத்து காளைகளுக்கும் போவணி, வேட்டி சேலைகள் பரிசாக கொடுக்கப்பட்டது. அமைச்சர்கள் பரிசு கொடுக்காத காளைகளுக்கு விழாக்கமிட்டி சார்பாக சைக்கிள் உள்ளிட பரிசுகளும் கொடுக்கப்பட்டன. 



சிறந்த மாடுபிடி வீரருக்கான கார் பரிசை 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர் பெற்றுக் கொண்டார். இதேபோல் சிறந்த காளை பரிசும் அவனியாபுரத்தைச் சேர்ந்த காளைக்கே கொடுக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. காயமடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்கள் எந்நேரமும் தயார் நிலையிலேயே இருந்தனர். எஸ்ஐ, காவலர் உள்ளிட்ட 50 காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்தந 6 பேர் மதுரை ராஜாஜி தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 


களத்தில் மாடுகள் ஒருபுறம் திமிறி விளையாடியது என்றால், மற்றொருபுறம் மாடுபிடி வீரர்கள் அஞ்சாமல் காளைகளை அடக்கி வீரதீரத்தை வெளிப்படுத்தினர். இந்த காட்சிகளை ஜல்லிக்கட்டு மைதானத்தின் இருபுறமும் சூழ்ந்திருந்த பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் வருகை தந்து ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்தனர். இறுதியாக, இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கார் பரிசை வென்ற கார்த்தி மற்றும் சிறந்த காளையின் உரிமையாளர் ஆகியோர் சென்னை அழைத்துச் செல்லப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாக விழாக்குழு அறிவித்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நிறைவு செய்தனர். 


மேலும் படிக்க | மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நடைபெற்ற சுவாரஸ்ய நிகழ்வுகள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ