மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நடைபெற்ற சுவாரஸ்ய நிகழ்வுகள்..!

avaniyapuram jallikattu 2024 highlights: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றன. அதனை தொகுப்பை இங்கே பார்க்கலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 15, 2024, 04:51 PM IST
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சுவாரஸ்யங்கள்
  • சீறிபாயும் என எதிர்பார்த்து புஸ்வானமான பாகுபலி காளை
  • திடீரென குறுக்கே வந்த நாய் காட்டிய வித்தை
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நடைபெற்ற சுவாரஸ்ய நிகழ்வுகள்..! title=

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் நடந்தது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முதன்முறையாக சாதி பெயர் இல்லாமலும், வழங்கமான சம்பிரதாயங்கள் இல்லாமலும் அரசு அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் இப்போட்டி நடத்தப்பட்டது. வாடிவாசல் அருகே இருக்கக்கூடிய வீடுகளில் வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் தவிர வேறு ஏதேனும் பார்வையாளர்கள் அனுமதிக்க கூடாது எனவும் அனுமதித்து சட்ட ஒழுங்கு ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 

மது அருந்திவிட்டு வந்தால் உடனடியாக போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள், ஏதேனும் சண்டையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய காளையின்  உரிமையாளர்கள் மூக்கணாங்கயிற்றை அவிழ்ப்பதற்காக கையில் கத்தியோ,  அரிவாளோ எடுத்து வரக்கூடாது அனுமதி மறுக்கப்பட்டது. 

மேலும் படிக்க | முடிஞ்சா என்ன அடக்கி பார்! ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்குள் வந்த நாய்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு அவனியாபுரம் போட்டி நடைபெறக்கூடிய வில்லாபுரம், அவனியாபுரம், முத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பத்துக்கு மேற்பட்ட அரசு மதுபான கடை மற்றும் மன மகிழ் மன்றங்களை மூடப்பட்டது. பாதுகாப்பு நலன் கருதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறக்கூடிய பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது கண்காணிப்பில் உள்ள தொடர் கடும் குற்ற வழக்குகள் பின்னணி உள்ள  நபர்களின் பெயரில் காளைகளை அவிழ்க்கவும் அனுமதி இல்லை. 

சிறப்பாக விளையாடிய காளைகளுக்கு அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சார்பில் தங்க காசுகள் கொடுக்கப்பட்டது. விதிமுறைகள் பின்பற்றாத மாடுபிடி வீரர்களுக்கு பரிசு கொடுக்கப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளன் காளை சிறப்பாக விளையாடியது. அவருடைய காளையை யாரும் பிடிவிக்கவில்லை. இதனையடுத்து, அந்த காளைக்கு அமைச்சர் பிடிஆர் சார்பில் தங்க காசு கொடுக்கப்பட்டது. 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்துவிடப்பட்ட அனைத்து காளைகளுக்கும் பரிசு கொடுக்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டது. போலீஸ் எஸ்ஐ காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  காளைகள் அவிழ்க்க போட்டி ஏற்பட்டதால் லேசான தடியடி காவல்துறையினர் நடத்தினர். ஒரு காளைக்கு திடீரென காலில் காயம் ஏற்பட்டதால் போட்டி 10 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டது.  சில மாடுபிடி வீரர்கள் ஆள்மாறாட்டம் செய்து விளையாடினர். அவர்களை காவல்துறையினர் மற்றும் நிர்வாக குழுவினர் கடுமையாக எச்சரித்தனர். உட்சபட்ச சுவாரஸ்யமாக திடீரென நாய் ஒன்று ஜல்லிக்கட்டு பாதையில் நுழைந்து குறுக்குமறுக்குமாக ஓடி விளையாடியது. இது பார்வையாளர்களுக்கு நகைப்பை ஏற்படுத்தியது. நாயை காவல்துறையினர் வந்து விரட்டினர். 

பாகுபலி காளை ஒன்று களத்தில் இறக்கப்பட்டது. அது விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டபோது அமைதியாக நின்று அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. மாடுபிடி வீரர் ஈஸியாக அந்த மாட்டை பிடித்து பிடித்து விளையாடினார். அவரை அறிவிப்பாளர் கிண்டலடித்து பரிசு கொடுத்தார். 

மேலும் படிக்க | Pongal Gift: 1000 ரூபாயை பெற இன்றே கடைசி நாள்... பொங்கலுக்கு பின்னரும் கிடைக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News