சிறந்த சமுதாய தொண்டாற்றும் கல்லூரி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருது!
Awards For Best College, Proffesors, Students : பூமி அறக்கட்டளை சார்பாக சிறந்த சமுதாய தொண்டாற்றும் கல்லூரி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா
சமுதாயத்திற்காக தன்னை ஒப்படைக்கும் மனிதர்களையும், நிறுவனங்களையும் அங்கீகரிப்பது என்பதும் சமூக கடமைகளில் தலையாயதுதானே. அந்த வகையில், பூமி அறக்கட்டளை நிறுவனம், சிறந்த கல்லூரி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. பூமி அறக்கட்டளையின் பயணம் 2006ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமுதாயக் களபணி என்று கல்வி சம்பந்தமாக செயல்படும் ஒரு தொண்டு நிறுவனமான பூமி அறக்கட்டளையால் இதுவரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்த நிறுவனத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் (volunteer's) தன்னார்வ தொண்டு ஊழியராகவும் இருந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | தொடங்கியது ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் - இலக்கு என்ன ?
இந்த Bhumi campus awards நோக்கம் என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் உள்ள மாணவர்களுக்கு சமுதாயத்தின் மீது அக்கறை வேண்டும் என்பதும், அப்படியான அக்கறையை காட்டும் மாணவர்களை இனம் கண்டு அவர்களை மேடையில் அழைத்துப் பாராட்டி அங்கீகரிப்பதாகும். அதேபோல், மாணவர்களுக்கு இப்படியான வழிகாட்டுதலை ஊக்குவிக்கும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கும், கல்லூரிக்கும் பூமி அறக்கட்டளை விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி, 2022ம் ஆண்டிற்கான விருதுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலங்குகள் பாதுகாப்பு, கல்வி விழிப்புணர்வு போன்ற துறைகளில் ஆகச்சிறந்த பங்களிப்பை அளித்த கல்லூரி, பேராசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் 220க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், 30 கல்லூரிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் , சமுதாய அக்கறை கொண்ட ஆசிரியர்கள் , கழிவு மேலாண்மை , மிகவும் தனித்துவமான சமுதாய முயற்சி, வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி என்று ஏழு வகையில் கல்லலூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்த விருது வழங்கும் விழாவில் டாக்டர்.சுல்தான் அகமது இஸ்மாயில் சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், இந்த விழாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ சங்கர் விஸ்வநாதன், ITC Academy-யின் சிஇஓ ஹரி பாலச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் காணொளி மூலம் பங்கேற்றார். விருது பெறும் அனைவரையும் அவர் காணொளி மூலமாக வாழ்த்துப் பாராட்டினார். பூமி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதேவி மோகிலி நீடி, விருதுகளை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் வாழ்த்தி நன்றியுரையும் வழங்கினார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR