ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தமிழக கோயில்களில் நேரலையில் ஒளிபரப்ப அனுமதி மறுப்பு தெரிவித்து தமிழக அரசு காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பாஜக சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இன்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.  இந்நிலையில், நேற்று தமிழக கோவில்களில் எந்தவித சிறப்பு பூஜையும் நடைபெற கூடாது என்று தமிழக அரசு கூறியதாக செய்திகள் வெளியானது.  இதனை தமிழக அரசு முற்றிலும் மறுத்து இருந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: இந்தியாவில் நடக்கும் முக்கிய மாற்றங்கள்!


தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது X பக்கத்தில், " இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது" என்று பதிவிட்டு இருந்தார்.



முன்னதாக இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது X தளத்தில், 22 ஜனவரி 24 அன்று நடைபெறும் அயோதா ராமர் மந்திர் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார்.  


இதற்காக தமிழக அரசு செய்தி குறிப்பும் வெளியிட்டு இருந்தது. அதில், " உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமன் கோயிலுக்கு குடமுழுக்கு விழா திங்கட்கிழமை நடைபெறுகிறது, அதனை ஒட்டி தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக நடை விதித்துள்ளது என தினமலர் நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆலய பணிகளை அனைவரும் போற்றுமொழியில் நிறைவேற்றும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் தீய நோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தி வெளியிட்டு பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது அதிருப்தியை தூண்டும் முயற்சி ஈடுபட்டுள்ள தினமலர் நாளிதழில் செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 


திருக்கோயில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


மேலும் படிக்க | ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் நித்தியானந்தா! அவரே வெளியிட்ட பதிவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ