கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் பாகுபலி என்ற காட்டுயானை உள்ளது. பெரிய தந்தத்துடன் இருக்கும் இந்த யானைக்கு மக்கள் வைத்த பெயர் தான் பாகுபலி. இந்த யானை கடந்த 10 நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள்ளும் விளை நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக சமயபுரம், நெல்லிதுறை, குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை பாகுபலி நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.., போலீஸார் விசாரணை..!


இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ’பாகுபலி’ சமயபுரம் ஊருக்குள் நுழைந்து அங்குள்ள கிராம சாலையின் நடுவே நடந்து சென்றது. தகவலை அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுயானை பாகுபலியை விரட்ட முயன்றனர். அப்போது டார்ச்சு லைட்டுகளை வைத்து வனத்துறை ஊழியர்கள் பாகுபலியை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது, காட்டுயானை பாகுபலி திடீரென  வனத்துறையினரை நோக்கி பிளிறியபடி விரட்டியது.