கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் கூட்டம் நடமாடி வருகிறது. இந்நிலையில் இரண்டு வயதுள்ள குட்டி யானை ஒன்று தோணிமுடி எஸ்டேட் இரண்டாவது பிரிவில் உள்ள ஃபீல்டு எண் 48ல் நேற்று உடல்நலக்குறைவால் எழுந்து நடமாட முடியாத நிலையில் மண்டியிட்டு அமர்ந்த நிலையில் இருந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை  சுமார் மூன்று மணியளவில் அந்த குட்டியானை உயிரிழந்துள்ளது.   


ALSO READ | Viral Video: நெடுஞ்சாலையை கடக்கும் ராட்சஸ அனகோண்டா பாம்பு..!!!


இதைத் தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் கணேசன் உத்தரவிற்கிணங்க ஆனைமலை புலிகள் காப்பக அட்டகட்டி பயிற்சி மைய துணை இயக்குநர் செல்வம், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் மருத்துவர் மணோகரன் தலைமையிலான மருத்துவக்குழு உடற்கூறாய்வு மேற்க் கொண்டனர்.



அப்போது உடல் நலக்குறைவால் உணவு உட்கொள்ளாமல் இருந்த நிலையில் ஆண் குட்டி யானை உயிரிழந்துள்ளதாக மருத்துவர் மூலம் தெரியவந்தது அதைத்தொடர்ந்து அப்பகுதியிலேயே குட்டியானையின் உடலை குழி தோண்டி புதைக்கப்பட்டது. 


ALSO READ | Watch viral video:'அம்மாவை பார்க்க போறேன்’; நம்பிக்கையுடன் செல்லும் குட்டி யானை..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR