கேரளாவில் அண்மையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி ஷவர்மா சாப்பிட்ட கடையில் சுகாதாரமற்ற நிலையில் உணவு சமைக்கப்பட்டதும், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ஷவர்மாவில், நாள்பட்ட இறைச்சி, சரியான உணவுப்பதப்படுத்துதல்‌ இல்லை என்றால்‌ அனைவருக்கும்‌ உடல்நலம்‌ பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார். உரிய விதிகளைப் பின்பற்றி ஷவர்மா கடைகள் இயங்குகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல்‌ ஷவர்மா விற்பனை செய்யும்‌ கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்‌ எனவும் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டார். 


மேலும் படிக்க | ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 17 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை


மேலும், ஷவர்மா போன்ற மேலைநாட்டு உணவு வகைகள் அந்நாட்டு தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும் என்றாலும் நமது ஊரில் அதனை தயாரிப்பதற்கான உரிய வழிமுறையை பின்பற்றாவிடில் பாதிப்பு ஏற்படுமென எனக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் இதுபோன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை  தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 


மேலும் படிக்க | தமிழக 'ஷவர்மா' கடைகளுக்கு ஆப்பு! கேரள மாணவி மரணத்தின் எதிரோலி!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR