தமிழக பள்ளிகளில் இன்றுமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்  பயன்படுத்துவதற்கு தடை விதித்து கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. 


தமிழக அரசின் உத்தரவின்படி... பால், தயிர், மருத்துவ பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதர பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படும். மேலும் பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பாட்டீல்கள், கைப்பைகள் உள்ளிட்டவைகளும் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த உத்தரவினை செயல்படுத்தும் விதமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 


இது குறித்து தமிழக பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...


"அனைத்துப் பள்ளிகளிலும், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கு மாற்றாக உள்ள பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செப்.15 (இன்று) முதல் இந்த தடை அமலுக்கு வரும் எனவும், பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளி வளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.