சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் ஃபெடரல் வங்கியின் தங்க நகை கடன் பிரிவு கிளை செயல்பட்டுவருகிறது. இங்கு பலரும் தங்களது நகைகளை அடமானம் வைத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் இன்று துப்பாக்கி முனையில் அங்கு கொள்ளை நடந்துள்ளது. ஃபெடரல் வங்கிக்கு இன்று பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்திருக்கின்றனர். வந்தவர்கள், அங்கிருந்த காவலாளி மற்றும் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டனர். இதனையடுத்து அவர்கள் வங்கியில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் பல சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தத் துணிகர சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல் துறை கூடுதல் ஆணையர் அன்பு, துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.


மேலும் படிக்க | திராவிட மாடல் குறித்து கட்டுரைகள் வெளிவர வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். 


மேலும் படிக்க | சாஃப்ட், சர்வாதிகாரி என வசனம் பேசுவதை நிறுத்துங்கள் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி விளாசல்


அப்போது, இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியவர் அதே வங்கியில் பணியாற்றுபவர் என தெரியவந்தது. அவருடன் வந்த மற்றவர்கள் அவரது நண்பர்கள் எனவும் கூறப்படுகிறது. கொள்ளையடிக்கப்பபட்ட பணம் மற்றும் நகைகளின் மொத்த மதிப்பு 20 கோடி ரூபாய் இருக்கும் என இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. வங்கி கொள்ளையர்களை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பட்டப்பகலில் சென்னையில் நடைபெற்ற இந்த வங்கிக் கொள்ளை பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | ஓர் ‘எதிர்க்கட்சியாக’ அதிமுகவிடம் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது என்ன ?!


மேலும் படிக்க | பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிராக 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ