தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது..!
தமிழகத்தை ஆள ரஜினிகாந்த்தை அனுமதிக்க முடியாது என்று, இயக்குநர் பாரதிராஜா ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்!!
தமிழகத்தை ஆள ரஜினிகாந்த்தை அனுமதிக்க முடியாது என்று, இயக்குநர் பாரதிராஜா ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்!!
உங்கள் பூமியை ஆள்வதுபோல, எங்கள் பூமியை தமிழர் ஆள வேண்டும். மராட்டிய மாநிலத்தை மராட்டியர் ஆள்கிறார், கர்நாடகாவில் கன்னடர்தான் முதல்வர். அசாமில், அசாம் மாநிலத்தவர்தான் முதல்வர். ஏன் எங்களுக்கு எங்கள் மண்ணின் மைந்தர் முதல்வராக கூடாது?
இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கையில்; உங்கள் பூமியை ஆள்வதுபோல, எங்கள் பூமியை தமிழர் ஆள வேண்டும். மராட்டிய மாநிலத்தை மராட்டியர் ஆள்கிறார், கர்நாடகாவில் கன்னடர்தான் முதல்வர். அசாமில், அசாம் மாநிலத்தவர்தான் முதல்வர். ஏன் எங்களுக்கு எங்கள் மண்ணின் மைந்தர் முதல்வராக கூடாது?
பழைய மோசமான முன் உதாரணத்தை வைத்து, அவர் முதல்வரானார்.., இவர் ஏன் ஆகக்கூடாது என கேட்க கூடாது. முன்பு தமிழர்கள் ஏதோ தெரியாமல் தூக்கி சுமந்தார்கள். முன்பு வெள்ளையன் ஆட்சி நடந்தது, இங்கே ஒரு வெள்ளையர் முதல்வராக இருந்தால் நீங்கள் ஆதரவு அளிப்பீர்களா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்க்கு முன்னதாக, ரஜினிகாந்த் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்கிறீர்களே என்ற கேள்விக்கு, அவர் ஒரு நல்ல மனிதர். எளிமையின் உச்சம். ரொம்ப அற்புதமானவர். நண்பர். அந்த அடிப்படையில், விழாக்களில் பங்கேற்கிறேன், என்றார். தமிழ் தேசிய கருத்துக்களை பாரதிராஜா தொடர்ந்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.