தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 7 வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனி மாவட்டம் பெரியக்குளம் அருகே அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவதுண்டு. கடந்த சில நாட்களாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் பெரியக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 


இதனால், பாதுகாப்புக்கருதி சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த தடை இன்று 7ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.