தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியை சேர்ந்த துளசிதாஸ் என்பவர் அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் அமைச்சரின் நேர்முக உதவியாளராக உள்ள துளசிதாஸின் தந்தை சம்பத் கடந்த ஜனவரி 6ஆம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது படத்திறப்பு விழாவானது  உத்திரமேரூர் அருகே உள்ள களியாமுண்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது.  இவ்விழாவில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துக்கொண்டு துளசிதாஸின் தந்தை சம்பத்தின் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | By Elections: ஈரோடு இடைத்தேர்தலில் யார் வேட்பாளர்? விளக்கம் அளிக்கும் ஜி.கே.வாசன்



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்கையில்,  உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மூலமாக வெளிநாட்டு மற்றும் தரச் சான்று இல்லாத பொம்மைகளின் தரம் கட்டுபாடு  குறித்தும் அதில் என்னென்ன ரசாயன பொருட்கள் கலந்துள்ளது, எந்தெந்த நாடுகளில் இருந்து வருகிறது, என்பது உள்ளிட்ட பல்வேறு செய்திகளை ஆராய்ந்து அதற்கேற்ற மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


பொம்மைகளை கையில் விளையாடுவது, அதில் இருக்கின்ற சாயம், அதை எடுத்து நாக்கில் வைப்பது என்பது போன்ற விஷயங்கள் இருக்கும் அதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ,காஞ்சிபுரம் நாடாளுமன்ற க.செல்வம், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகர், பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்சுப்பிரமணியன்.


மேலும் படிக்க | களம் தயார்! ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ