Beware of Dogs: கிருஷ்ணகிரி (Krishnagiri) மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா காட்டாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தூர் என்ற கிராமத்தில் மாலை நேரத்தில் தீடிரென புகுந்த வெறிநாய் (Rabid Dog) கண்ணில் பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்களை விரட்டி, விரட்டி  கடித்ததில் படுகாயம் அடைந்தவர்களை கிராம மக்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்து விடடு தப்பி சென்ற வெறிநாயை பிடிக்க கிராம மக்கள் பல்வேறு இடங்களிலும் தேடியும், அந்த  வெறி நாய் கிடைக்கவில்லை,


கிராமத்திற்குள் புகுந்த வெறி நாய் கடித்ததில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கால்நடைகள் என சுமார் 80-க்கு மேற்பட்டவர்களை கடித்து விட்டு தப்பி சென்றுள்ளது,


ALSO READ |  தன்னை மறந்து TV-யில் மேச் பார்க்கும் நாயின் வீடியோ வைரல்..!


பொது மக்களை விரட்டி விரட்டி கடித்த இந்த வெறிநாயை பிடிக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாயை சுட வேண்டும் என அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் காட்டகரம் (Kattagaram Gram) ஊராட்சிக்கு உட்பட சந்துர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஊர் மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 


இதேபோல கடந்த இண்டு மாதங்களுக்கு முன்பு பலர் வெறிநாய் கடிக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஏற்கனவே ஒருபக்கம் கொரோனா தொற்று அச்சம் நிலவி வரும்வேளையில், வெறிநாய் கடித்து 80-க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.


ALSO READ |  தன் நான்கு குழந்தையை கொடூரமாக கொன்ற எதிரியை பழிவாங்கும் தாய்!


கடந்த சில நாட்களாக சந்தூர் (Santhur) மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்த கிராமத்தில் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR


(செய்தித்தகவல்: திரு. பிரகாஷ்)