ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை வாங்க உங்கள் ரேஷன் கார்டுகளை நீங்கள் பயன்படுத்தாவிட்டால், மூன்று மாதங்களில் உங்கள் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் யாரும் உணவில்லாமல் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான 'ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு' அதாவது ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது. இருப்பினும், அதன் கீழ் உள்ள விதிகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும்.


 புதிய ரேஷன் கார்டு (Ration Card) விதி எளிய ஒரு சூத்திரத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நபர் மூன்று மாதங்கள் வரை ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால், அவர்கள் அரசாங்க உதவியின்றி தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்று கருதப்படுவார்கள்.


 இதன் பொருள் என்னவென்றால், ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் மூன்று மாத காலத்திற்குள் ஒரு முறையவது ரேஷனில் பொருட்களை வாங்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், ரேஷன் கார்டு காலாவதியானதாகக் கருதப்படும்.


ALSO READ: சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு


பீகார், மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh) போன்ற மாநிலங்கள் இந்த விதியைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. அதே சமயம் உத்தரபிரதேச உணவு வழங்கல் துறை மாவட்ட வாரியாக இது குறித்த அறிக்கையை கோரியுள்ளது.


'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் என்றால் என்ன?


2020 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரு ரேஷன் கார்டு' திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், COVID-19 தொற்றை கருத்தில் கொண்டும் மாநிலங்கள் அவரவரது மொத்த மாநில உற்பத்தியில் (GSDP) இரண்டு சதவீதம் வரை கூடுதலாக மத்திய அரசிடமிருந்து (Central Government) பெறலாம் என அறிவிக்கப்பட்டது. ஆந்திரா, குஜராத், கோவா, ஹரியானா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஒன்பது மாநிகங்கள் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.


ALSO READ: அதிர்ச்சித் தகவல்: கடந்த ஏழு ஆண்டுகளில் 4.39 கோடி போலி ரேஷன் கார்டுகள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR