சென்னை : காளிகாம்பாள் கோயில் அர்ச்சகரின் காமகளியாட்டம் - காவல்துறையிடம் 3 பேர் வாக்குமூலம்
சென்னையில் காளிகாம்பாள் கோயிலுக்கு வந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அவர் பாரி முனையில் இருக்கும் காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி செல்லும்போது அங்கிருக்கும் அர்ச்சகர் கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில், அப்பெண்ணை வீட்டிற்கும் அழைத்துச் சென்றிருக்கிறார் அர்ச்சகர். அங்கு வைத்து அவருக்கு மயக்கம் ஏற்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து அறிந்த அப்பெண், அதிர்ச்சியடைந்ததுடன் அவரையே திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியிருக்கிறார். இருவரும் ஒன்றாக வீடு எடுத்து இருந்த நிலையில், அர்ச்சகரின் செல்போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ இருந்துள்ளது.
மேலும் படிக்க | பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு.. ரயிலில் பரபரப்பு
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், தன்னுடைய புகைப்படங்களையும் அர்ச்சகர் வேறு சிலருக்கு அனுப்பியிருப்பதை அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அந்த பெண் தொகுப்பாளர் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரில், 'சென்னை மண்ணடி பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர், அந்த கோவிலுக்கு தான் சென்றபோது தன்னுடன் நட்பாக பழகி வந்ததாகவும், அதன் பிறகு, தன்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்துவிட்டார்' எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நம்பிக்கை மோசடி, பெண்ணை மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து கார்த்திக் முனுசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸூம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட மூன்று பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கோயில் பணியாளர்கள் மேலும் சிலருக்கு சம்மர் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ