மே 25இல் உருவாகும் புதிய புயல்... வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி - பாதிப்பு இருக்குமா?

New Cyclone In Bay Of Bengal: வங்கக் கடலில் வரும் மே 25ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 23, 2024, 01:51 PM IST
  • மே 25ஆம் தேதி புயல் உருவாகும்.
  • மே 26ஆம் தேதி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
  • REMAL என இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
மே 25இல் உருவாகும் புதிய புயல்... வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி - பாதிப்பு இருக்குமா? title=

New Cyclone In Bay Of Bengal: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வரும் மே 25ஆம் தேதி காலையில் புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் உருவாகும்பட்சத்தில் ஓமான் நாடு பரிந்துரைத்துள்ள REMAL என அந்த புயலுக்கு பெயர் சூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று மே 23ஆம் தேதி அன்று காலை 8.30 மணிக்கு மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்காள விரிகுடாவில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்துமே, மே 24ஆம் தேதி காலை வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிய வாய்ப்புள்ளது.

புயலின் பெயர் என்ன?

அதன்பிறகு, இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து,மேலும் தீவிரமடைந்து கிழக்கு மத்திய விரிகுடாவில் புயலாக மாற வாய்ப்புள்ளது. மே 25ஆம் தேதி காலை வங்காளத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையை மே 26 மாலைக்குள் கடுமையான சூறாவளி புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு பெயரிடும் முறைப்படி இந்த முறை ஓமன் நாடு பரிந்துரைத்த ரீமால் (REMAL) என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க | பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு.. ரயிலில் பரபரப்பு

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அடுத்த சில நாள்களின் வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.அதில், "நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் மத்தியமேற்கு மற்றும் அதனை  ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை (24.05.2024) காலை  மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
 
வானிலை நிலவரம்
 
அதன் பிறகு, இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து , புயலாக வலுப்பெற்று, மே 25ஆம் தேதி காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது, வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று, வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை நோக்கி நகரக்கூடும். கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
 
இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை நாளை (மே 24) பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் மே 25ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News