ED Freezes A Raja Assets: அமலாகத்துறை இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில்,"2002ஆம் ஆண்டின் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் பினாமி நிறுவனம் கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. ஆ.ராசா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, தற்காலிக இணைப்பு உத்தரவை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு முன், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், கோவையில் உள்ள ஆ. ராசாவின் 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது நினைவுக்கூரத்தக்கது. இதற்கு சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் தீர்ப்பாயம் ஜூன் 1 அன்று இந்த உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தது. 


பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) விசாரணையின் போது, ராஜா, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, குருகிராமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை அமலாக்கத்துறை கண்டறிந்தாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு!


குற்றச்சாட்டு என்ன?


மேலும் விசாரணையின் போது, 2007ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் வேறு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததை தொடர்ந்து, அந்த நிறுவனம் ஆ. ராசாவின் பினாமி ஒருவருக்கு பணம் கொடுத்ததை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.


தொடரும் சோதனைகள்


தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை என்பது கடந்த சில மாதங்களில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் இலக்கா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். மேலும், அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சீகாமணி மற்றும் அவரை சார்ந்தோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. மேலும், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனிடம் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.


மேலும், அதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 81.7 லட்ச ரூபாய் பணம் மற்றும் இந்திய மதிப்பில் 13 லட்சத்திற்கு பிரிட்டிஷ் பவுண்ட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. மேலும், சில நாள்களுக்கு முன் வருமான வரித்துறையினர் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இது பாஜகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என திமுக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது.


மேலும் படிக்க | தயாநிதி மாறன் மனைவியிடமே 'பலே' மோசடி - இந்தியில் பேசி ரூ. 99 ஆயிரம் அபேஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ