Madras High Court Verdict on Non Hindus in Palani Murugan Temple News in Tamil: பழனி ஶ்ரீ தண்டாயுதபாணி கோவிலில் 'இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை' என்ற பதாகையை மீண்டும் வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்திருந்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சட்டத்தின்படி...


அந்த மனுவில்,"மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் பழனியில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இந்து அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.


இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோவிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது. இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்போது நிறைவேற்றப்பட்டது.


மேலும் படிக்க | Sanatana Dharma Issue: உதயநிதிக்கு 'செக்' - ஓயாத சனாதன தர்மம் பிரச்னை... நீதிமன்றம் புதிய உத்தரவு


'பதாகை நீக்கப்பட்டது ஏன்?'


தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும், மாற்று மதத்தை நம்புகிற ஒருவரும் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு உள்ள சூழலில் பழனி தேவஸ்தானத்தில் பழனி முருகன் கோவிலில் 'இந்து அல்லாத நபர்கள் திருக்கோவிலுக்குள் நுழைய தடை' என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது. 


இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு இந்த பதாகைகள் நீக்கப்பட்டுள்ளது.


நீதிபதி உத்தரவு


எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். 'இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை' என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, 'இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை' என்ற பதாகை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இந்து அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஏற்கனவே நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.


மேலும் படிக்க | கோயம்பேட்டில் லுலு மால் வருகிறதா? தமிழக அரசு விளக்கம்!


தீர்ப்பு சொல்லப்பட்டது என்ன?


இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் மற்றும் அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகி விரிவான வாதம் செய்தனர். பின்னர் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.


இந்த வழக்கில் இன்று (ஜன. 30) தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ஸ்ரீமதி அளித்த அந்த தீர்ப்பில், "இந்து அல்லாதவர்கள் கோவிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது. இந்து அல்லாதவர்கள் மற்றும் 'இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது' என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.


மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோவிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும். அந்த பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்திரவாதம் கொடுத்து "உறுதிமொழி" எழுதிக் கொடுத்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கலாம். இந்து அறநிலையத்துறை ஆணையர் கோவிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | TASMAC: டாஸ்மாக்கில் எந்த சரக்குக்கு என்ன விலை? விலை உயர்வால் தள்ளாடும் ’குடிமக்கள்’!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ