தொட்டதெல்லாம் துலங்கும் ‘தைப்பூசம்’ திருநாள்... விரதம் இருப்பது எப்படி?

Thaipusam 2024 Festival: தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசத்திருவிழா என்பது தனி சிறப்பம்சம் கொண்டது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 25, 2024, 09:56 AM IST
  • தைப்பூசத்திருவிழா என்பது தனி சிறப்பம்சம் கொண்டது.
  • தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான முருகப்பெருமான்.
  • ‘தைப்பூசம்’ திருநாள்... விரதம் இருப்பது எப்படி?
தொட்டதெல்லாம் துலங்கும் ‘தைப்பூசம்’ திருநாள்... விரதம் இருப்பது எப்படி? title=

தைப்பூசம் 2024: தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசத்திருவிழா என்பது தனி சிறப்பம்சம் கொண்டது. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று பத்து மலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருவார். உலக நாடுகளில் தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப் படுவது மலேசியாவில் மட்டுமே. பவுர்ணமி தினத்தன்று பூசம் நட்சத்திரமும் வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும். தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் பழனியில் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.

முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும். தைப்பூசத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள். தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு. இதனால், தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.

மேலும் படிக்க | தைசப்பூச பக்தர்களுக்கு இனிமையான செய்தி... தொடர் விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தைப்பூசம் அன்றுதான் முருகன் வள்ளியை மணம் புரிந்து கொண்டான். சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும். தைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது.

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள குமரக்கோவிலில் தைப்பூச நன்னாளில், முருகப் பெருமானுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் விபூதியால் அபிஷேகம் செய்வதும், அதனைத் தரிசிப்பதும் சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். மேலும், செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கோவிலில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமிக்கு பால் வைத்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

தொட்டது துலங்கும் விரதம்: 
தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு. தைப்பூசம் நாளில் உலகத்தில் பல நற்காரியங்கள் நிகழ்ந்துள்ளதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

சுப்பிரமணிய ஷோடச நாமாவளி:
ஓம் ஞானசக்த்யாதமனே நம:
ஓம் ஸ்கந்தாய நம:
ஒம் அகனி காபாய நம:
ஓம் பாகுலேயாய நம:
ஓம் காகநேயாய நம:
ஓம் சரவணோத் பவாய நம:
ஓம் கார்த்திகேயாய நம:
ஓம் குமாராய நம:
ஓம் ஷண்முகாய நம:
ஓம் குக்குடத்வஜாய நம:
ஓம் சேனான்யே நம:
ஓம் குஹாய நம:
ஓம் பிரும்ம சாரிணே நம:
ஓம சிஜதேஜஸே நம:
ஓம் கௌஞ்சதாரிணே நம:
ஓம் சிகி வாகனாய நம:

மேலும் படிக்க | தைப்பூச நன்னாளில் சந்திரன் யாருக்கு சாதகமாக இருப்பார்? எந்த ராசிக்கு பாதிப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News