தஞ்சாவூரை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். பாத்திரக்கடை நடத்தி வந்த இவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக 13 பேரை காவல்துறை கைது செய்தது. பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் நபர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் குறித்த புகைப்படத்தை கைப்பற்றியுள்ள தேசிய புலனாய்வு முகமை, தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கமலாலயத்தை முற்றுகையிட வரும் காங்கிரஸ்க்கு உணவு தயாராக இருக்கும்: எல். முருகன்


இருப்பினும் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் குறித்து இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகபை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் முகமது அலி ஜின்னா,  அப்துல் மஜித், புர்ஹானுதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹசன் என்ற தஞ்சாவூரை சேர்ந்த 5 பேரின் புகைபடங்களுடன் ஒட்டப்பட்டுள்ளது. 


மேலும், தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும்  இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபருக்கு தலா 5 லட்சம் வீதம்,5 பேருக்கு 25 லட்சம் ரூபாய் பணம் சன்மானமாக  வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கோவை மாநகரைப் பொறுத்தவரையில் காந்திபுரம், உக்கடம், பீளமேடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அந்த சுவரொட்டியில், ‘வழக்கில் தேடப்படும் மேற்கண்ட 5 நபா்களின் புகைப்படம், வயது, முகவரி விவரம், மேற்கண்ட நபா்கள் குறித்து தகவல் தெரிந்தால் ‘தேசிய புலனாய்வு முகமை, எண் 10, மில்லா்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை- 600010 என்ற முகவரியில் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.


இந்த கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மொபைல் எண், இமெயில் உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் என்ஐஏ உத்தரவாதம் கொடுத்திருக்கிறது.


மேலும் படிக்க | சென்னை : இரவு பார்ட்டிக்கு அழைத்த பெண் அழகி... ஆசையாக சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ