பைரவருக்கு இவ்வளவு பெரிய சிலையா? அப்படி என்ன சிறப்பு?
யுனிக் ரெக்கார்டு புக்கில் இடம்பெற்ற 39 அடி உயர பைரவருக்கு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் மிகப்பெரிய நடைபெற உள்ளது.
ஈரோடு அருகே ராட்டைசுற்றிபாளையத்தில், கால் பெருவிரல் ரேகை ஜோதிடர் விஜய் சுவாமி என்பவர் பைரவருக்கு கோவில் கட்டியுள்ளார். கோவிலின் முன்வாயிலில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 7 டன் எடையுடன் 39 அடி உயரத்தில் நிறுவப்பட்ட மிக பிரமாண்டமான கால பைரவர் சிலை யுனிக் புக் ஆப் வோர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 7 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த கோவிலின் குடமுழுக்கு விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | நான் சாதாரண ஸ்டாலின் இல்லை... முதலமைச்சரின் மாஸ் ஸ்பீச்
சிவனின் அவதாரமாக கருதப்படும் பைரவருக்கு உலகிலேயே மிகப்பெரும் தனி கோவிலாக இது இருக்கும் என்றும் மேற்கு நோக்கி பைரவர் அமைந்திருப்பதும் தனிசிறப்பு இங்கு, பக்தர்கள் அனைவரும் பாகுபாடின்றி நேரடியாக கர்ப்பகிரகத்திற்குள் சென்று தடையின்றி பூஜை செய்து வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதேபோல் வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் 64 பைரவர்களையும் ஒரே இடத்தில் இங்கு தரிசிக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
தீர்த்த ஊர்வலம் யானை, குதிரை கிராமிய நிகழ்ச்சி மற்றும் வான வேடிக்கையுடன் சிறப்பாக நடைபெறும். 12ம் தேதி மாசி மாதம் 28ம் நாள் காலை 10 மணிக்கு 2ம் கால் பூஜை, மாலை 5 மணிக்கு 3ம் கால பூஜை, இரவு 7 மணிக்கு மேல் பாரம்பரிய கும்மி திருவிழா நடைபெறும். 13ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை, மற்றும் 10.15க்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ