Kalaignar Magalir Urimmai Thogai: 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலன் பரப்புரையின் போது, திமுக அதன் தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1000 ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாயை விரைந்து அமல்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம், பேருந்தில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் போன்ற திட்டங்கள் உடனடியாக கொண்டு வரப்பட்டாலும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் மட்டும் அறிவிக்கப்படாமலேயே இருந்தது.


பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு


இதையடுத்து, சட்டப்பேரவையில் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்த அப்போதைய நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 2023ஆம் ஆண்டு செப். 15ஆம் தேதி முதல் இருந்து மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து, அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து, அதனை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் முழுமையாக ஆய்வு செய்யப்ட்டது. இத்திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimmai Thogai) எனவும் பெயரிடப்பட்டது. இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


மேலும் படிக்க | டிடிஎஃப் வாசன் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து! அரசு அதிரடி உத்தரவு


தொடர்ந்து, குடும்பத் தலைவிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த திட்டத்தில் மொத்தம் 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அடுத்து முதற்கட்டமாக, விண்ணப்பங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு, 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர். 


கடந்த மாதம் தொடக்கம்


அந்த வகையில், முதல் தவணையாக கடந்த செப்.15ஆம் தேதி மகளிருக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் செலுத்தப்பட்டது. குறிப்பாக, ஒரே நாளில் அத்தனை பேருக்கும் பணம் அனுப்பவதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஒருநாள் முன்கூட்டியே அதாவது செப். 14ஆம் தேதியே பலருக்கும் உரிமைத் தொகை செலுத்தப்பட்டது நினைவுக்கூரத்தக்கது. 


இத்திட்டத்தை கடந்த செப். 15ஆம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 உரிமை தொகை செலுத்தப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மையம் ஒன்றை மாநிலம் முழுவதும் அமைத்து, அவர்களின் விண்ணப்பங்கள் குறித்த சந்தேகங்களை தீர்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


அரசின் முக்கிய அறிவிப்பு


தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்து (TN Government) இருந்தது. அதன்படி தற்போதைய நிலையில் 6 லட்சத்திற்கு மேற்பட்டோர் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், இந்த மாதம் 15ஆம் தேதி (October Installement) ஞாயிற்றுக்கிழமை வருவதால், ஒருநாள் முன்கூட்டியே பயனாளர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, வரும் 14ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | ஆளுநர் தேவையில்லாமல் பேசுகிறார் - உதயநிதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ