Tamil Nadu Cabinet: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு (Udhayanidhi Stalin) திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு, துணை முதல்வராக நியமிக்க முதலமைச்சர் ஸ்டாலினின் (MK Stalin) பரிந்துரைத்திருந்தார். இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஆர். என். ரவி (Governor RN Ravi) நேற்று ஒப்புதல் அளித்தார். மேலும், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமசந்திரன் ஆகிய மூன்று பேரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க முதல்வர் அளித்த பரிந்துரையையும் ஆளுநர் ஏற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, செந்தில்பாலாஜி, சா.மு. நாசர், கோவி. செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் பரிந்துரைத்த நிலையில், அதற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. அதுபோல, அமைச்சர்கள் பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 6 பேரின் இலாக்காகள் மாற்றியமைக்கப்படுவாத அறிவிக்கப்பட்டது. 


அமைச்சரவையில் மாற்றம்


இதில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறையும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்த மின்சாரத்துறை திரும்பப் பெறப்பட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை கூடுதலாக வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை  அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாடு துறை வழங்கப்பட்டுள்ளது. வனத்துறையை வைத்திருந்த மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டது.


மேலும் படிக்க | தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டது ஏன்...? முழு பின்னணி


புதிய அமைச்சர்கள் பதவியேற்பு 


இந்நிலையில், சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி தொகுதி எம்எல்ஏ ஆர். ராஜேந்திரன், கரூர் தொகுதி எம்எல்ஏ செந்தில்பாலாஜி, தமிழ்நாடு தலைமை கொறடாவாக இருந்த திருவாடுதுறை தொகுதி எம்எல்ஏ கோவி. செழியன், ஆவடி தொகுதி எம்எல்ஏ சா.மு. நாசர் ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 



பிடிஆர், கனிமொழி மிஸ்ஸிங்


இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முக்கிய தலைகளில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கனிமொழி எம்.பி., மட்டும் மிஸ்ஸிங் எனலாம். 


உதயநிதி பதவியேற்காதது ஏன்?


இதில் உதயநிதி ஸ்டாலின் ஏன் துணை முதல்வராக மேடையில் பொறுப்பேற்கவில்லை என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் முதலமைச்சர் ஸ்டாலினால் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது துணை முதல்வர் பொறுப்பு என்பது சட்டரீதியாக சரி என்றாலும் அது அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்ட பதவி கிடையாது. எனவே, இதில் நியமனம் மட்டுமே செய்ய முடியும், பதவியேற்பு கிடையாது. மாறாக, அமைச்சர் பதவி என்பது அரசியமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்டதாகவும், எனவேதான் ஆளுநர் தலைமையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 



புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள்


இது ஒருபுறம் இருக்க, புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்ற அமைச்சர் கோவி.செழியனுக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உயர் கல்வித்துறைக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சராகி இருப்பது இதுவே முதல்முறை... அமைச்சர்  ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் சா.மு.நாசருக்கு இம்முறை சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


ஸ்டாலின் வைத்த திடீர் ட்விஸ்ட்


மறுபுறம் சிறையில் இருந்து வெளிவந்து மூன்று நாள்களிலேயே அமைச்சராக பதவியேற்றிருக்கும் செந்தில் பாலாஜிக்கு (Senthil Balaji) மின்சாரத்துறை உறுதி என நேற்றே கணிக்கப்பட்டது. காரணம், தங்கம் தென்னரசுவிடம் இருந்து அந்த பொறுப்பு திரும்பப் பெறப்பட்டது ஆளுநர் மாளிகை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று திடீர் ட்விஸ்ட்டாக செந்தில் பாலாஜி முன்னர் வைத்திருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை (Prohibition And Excise Department) மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது. அதாவது, முத்துசாமியிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து நேற்றைய ஆளுநர் மாளிகை அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், இன்று திடீரென மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டது ட்விஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | அமைச்சரவையில் இருந்து நீக்கியதால் மனோ தங்கராஜ் கடும் அதிருப்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ