Tamil Nadu Latest News: தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) நாளை பொறுப்பேற்கிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என பல மாதங்களாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.
துணை முதல்வராக பதவியேற்கும் உதயநிதி
அதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போதுள்ள இலாகாக்களுடன் கூடுதலாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையை ஒதுக்குமாறும், துணை முதலமைச்சராக நியமிக்கவும் தமிழக ஆளுநருக்கு தமிழக முதல்வர் பரிந்துரை செய்துள்ளார் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் யார் யார்?
மேலும், வி.செந்தில்பாலாஜி, டாக்டர் கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை அமைச்சரவையில் சேர்க்கவும் முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளார். அமைச்சரவையில் முதலமைச்சரின் இந்த பரிந்துரைகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பதவியேற்பு விழா சென்னை ராஜ்பவனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மூன்று அமைச்சர்கள் நீக்கம்
6 அமைச்சர்களுக்கு இலாக்கா மாற்றம்
இதுமட்டுமின்றி மொத்தம் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு, வனத்துறை வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாடு துறை வழங்கப்பட்டுள்ளது. வனத்துறையை பார்த்துவந்த மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களுக்கு என்ன இலாக்கா?
செந்தில்பாலாஜி மீண்டும் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை வழங்கப்பட உள்ளது. சா.மு. நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறை வழங்கப்பட உள்ளது. கோவி. செழியன் உயர்கல்வித்துறையை பெறுவார் என தெரிகிறது. அதன்படி முதல்முறையாக உயர்கல்வி துறைக்கு தலித் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்கிறார். பனைமரத்துபட்டி ராஜேந்திரனுக்கு சுற்றுலா துறை ஒதுக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சுற்றுலா துறை அமைச்சராக இருந்து அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட குன்னூர் ராமசந்திரனை தமிழ்நாடு அரசின் கொறடாவாக நியமித்துள்ளதாக தெரிகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ