பாஜக, அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் - MK ஸ்டாலின்!
வரும் மக்களவைத் தேர்தலோடு பாஜக - அதிமுக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
வரும் மக்களவைத் தேர்தலோடு பாஜக - அதிமுக ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
நேற்று விருதுநகரில் நடைபெற்ற திமுக தென் மண்டல மாநாட்டில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,... தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத 2 முதல்வர்களை தந்த மாவட்டம் விருதுநகர் மாவட்டம். பிஎஸ்.குமாரசாமி ராஜா, பெருந்தலைவர் காமராஜரை தந்த மாவட்டம். தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி, 78 நாள் உண்ணாவிரதம் இருந்த தியாகி சங்கரலிங்கனார் பிறந்த மாவட்டமும் விருதுநகர்தான்.
இத்துனை பெருமை வாய்ந்த இந்த மாவட்டத்தில் நடக்கும் இந்த மாநாடு கொள்ளைக்கார கே. பழனிசாமி ஆட்சிக்கும், மத்திய பாசிச பாஜகவின் ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு தொடக்கப் புள்ளி.
சென்னைக்கு அருகில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டம் தற்போத நடந்த முடிந்துள்ளது. அக்கூட்டத்தில் மோடி பேசும்போது, திமுக கூட்டணியை சந்தர்ப்பவாதக் கூட்டணி எனச் சொல்லி இருக்கிறார். காங்கிரஸுடன் இந்திரா காலத்திலும், சோனியாகாந்தி காலத்திலும், தற்போது ராகுல்காந்தி காலத்திலும் கூட்டணி வைத்திருக்கிறோம். தேர்தல் காலத்தில் மட்டுமல்ல. இந்த நாட்டுக்கு ஆபத்து வரும் நேரங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சியோடு தான் கை கோர்த்திருக்கிறோம். ஆனால், தாங்கள் அமைத்துள்ள கூட்டணியை, எந்த தலைப்பில் அழைப்பது? என கேள்வி எழுப்பினார்.
அதிமுக அமைச்சர்களின் குட்கா ஊழல், சிபிஐ விவகாரங்களை வைத்துக்கொண்டு, கொடநாடு விவகாரத்த முன்வைத்து மிரட்டித்தானே அதிமுக-வோடு பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. அப்படி இல்லையென்றால் வேறு எந்த கொள்கை அடிப்படையில் கூட்டணி என பாஜக விளக்க முன்வருமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
130 கோடி மக்கள் எனது குடும்பம் எனச் சொல்லும் மோடி, 130 கோடி மக்களையும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார். அவர் செய்துள்ள ஒரே சாதனை ஒரே நாளில் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அனைத்து மக்களையும் நடுத்தெருவில் நிறுத்தியதுதான்.
தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல், எந்த முகத்தோடு இங்கு வருகின்றார்? என அடுத்தமுறை பிரதமர் வரும்போது மக்கள் கேட்க வேண்டும்.
குஜராத் மோடியா, தமிழகத்தின் லேடியா என அவருக்கு சவால் விட்டவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதா மீது மோடிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. 78 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை பார்க்க வராத மோடி, இப்போது மக்களவைத் தேர்தலுக்காக ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுகிறார். ஜெயலலிதா இல்லாத சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு அதிமுக-வுடன் கூட்டணி வைக்கும் பாஜக சந்தர்பவாத கூட்டணியை அமைக்கிறதா, இல்லா திமுக அமைக்கிறதாக என மக்களே பதில் கூறுவர் என தெரிவித்தார்.