BJP VCK Clash: சென்னையில் விசிக பாஜக மோதலில் போலீசாருக்கு காயம்
சென்னையில் விசிக,பாஜக இடையே ஏற்பட்ட மோதலில் பாஜகவினருக்கு காயம் ஏற்பட்டது, காவல்துறையை சேர்ந்த ஒருவரின் மண்டை உடைந்தது.
சென்னை: சென்னையில் விசிக,பாஜக இடையே ஏற்பட்ட மோதலில் பாஜகவினருக்கு காயம் ஏற்பட்டது, காவல்துறையை சேர்ந்த ஒருவரின் மண்டை உடைந்தது.
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் ஆங்காங்கே அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை வந்து மாலையிட்டு மரியாதை செய்தார்.
இதனையடுத்து திருமாவளவன் மாலையிட்டு சென்ற பின்பு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாலையிட வருகை புரிவதை ஒட்டி, உடனடியாக பாஜக தொண்டர்கள் கம்பத்தில் இருந்த விசிக கொடியை நீக்கி பாஜக கொடியை கட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் விசிக மற்றும் பாஜக தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி கீழே கிடந்த கல்லை எடுத்து வீசி மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் பாஜகவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், செந்தில் உட்பட மூன்று பேரின் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த காவலரின் மண்டையும் உடைக்கப்பட்டது.
இதனால் சலசலப்பு ஏற்பட்டதால் உடனடியாக விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது செய்ய வேண்டும் என பாஜக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை சமாதானம் செய்யும் பணியில் கோயம்பேடு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அழைத்து தனித்தனியாக சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி அளித்தனர். பின்னர் பாஜகவினர் மாலை அணிவித்து விட்டு திரும்பிச் சென்றனர். இருதரப்பு இடையே ஏற்பட்ட இந்த திடீர் சலசலப்பு மற்றும் மோதல் போக்கால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
மேலும் படிக்க | Whatsapp-ல் இந்த அம்சங்கள் கூட இருக்கா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR