காட்பாடியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது அமைச்சர் துரைமுருகனை கடுமையாக சாடி பேசியுள்ளார் அண்ணாமலை. அண்ணாவின் கொள்கைக்கு நேர் எதிராக ஆட்சி நடந்து வருகிறது காட்பாடியில் துரைமுருகன் குடும்பம் வளர்ந்ததே தவிர காட்பாடி வளரவில்லை என்று கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை 87 வது நாளாக "என் மண் என் மக்கள்" நடை பயணத்தை மேற்கொண்டார். காட்பாடி வள்ளிமலை கூட்டு சாலையில்  இருந்து சித்தூர் பேருந்து நிறுத்தம் வரை நடைபயணம் மேற்கொண்டவர் நடை பயணத்திற்கு பிறகு சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முரசொலி நில வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!


அப்போது அவர் பேசுகையில், எம்.பி கதிர் ஆனந்த் 5 ஆண்டில் என்ன தான் செய்தார். ஆபாசமும், வன்மமும் திமுகவில் அதிகம் அதில் பொன்முடி, துரைமுருகன் தான் அதிகம் பேசுவார். 2019- நாடாளுமன்ற தேர்தலில் போது பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமைப்பு செயலார் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு போட்டார். அதில் கதிர் ஆனந்த் அப்பா துரைமுருகன் வேறு, ரெய்டு நடந்த துரைமுருகன் வேறு" என பேசினார். நம்மியார் போல் மரு வைத்தால் ஒரு துரைமுருகன், மரு இல்லாவிட்டால் வேறு துரைமுருகன் கணக்கு. கடந்த தேர்தலில் 741 ஓட்டில் தப்பிவிட்டார் அடுத்த தேர்தலில் இது நடக்காது. 


நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்த சாதனை என்னென்னா தெரியுமா? பேபி அணைக்கு 4 கொத்தனாரை அழைச்சுட்டு போனது தான்.  பொதுப்பணித்துறையில் மேற்கொண்டு வரும் பணிகள் என அமைச்சர்கள், முதலமைச்சர் என மாறி மாறி கொடுத்த தகவலை பட்டியலிட்டார் அண்ணாமலை.  இவர்கள் எல்லாம் காமெடி பீஸ். கவுண்டமணி - செந்தில் வாழைபழ காமெடி போல துபாய்க்கு முதலீடு எடுக்க போன முதலீடு இன்னும் வரலை.  மணல் ரெய்டு வந்தாலோ, பையனுக்கு சீட் கிடைக்காது என தெரிந்தாலோ மருத்துவமனைக்கு போய்விடுவார் முதல்வருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த அமைச்சரான துரைமுருகன்.


அண்ணாவின் கொள்கைக்கு நேர் எதிராக ஆட்சி நடந்து வருகிறது. காட்பாடியில் துரைமுருகன் குடும்பம் வளர்ந்ததே தவிர காட்பாடி வளரவில்லை. லஞ்சம் சாதாரணமாகி விட்டது. குடும்ப அரசியல், ஜாதி அரசியல், அடாவடி அரசியல் என இந்த நான்கின் மொத்த இலக்கணமாக உள்ள திமுகவை வீழ்த்தி 3 வது முறை மோடியை பிரதமராக்க வேண்டும் என பேசினார்.  இதற்கு முன்பு ஆம்பூரில் பேசிய அண்ணாமலை, உலக முதலீட்டார்கள் மாநாடு நடந்து 10 நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் மறுபடியும் ஸ்பெயின் நாட்டிற்கு முதல்வர் போகிறார், அங்கு ஏன் 10 நாட்கள் போகவேண்டும்,  இந்த பயணத்தை மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த பயணம் இல்லை, மாநில அரசு உண்மையை சொல்ல வேண்டும்,  


முதல்வர் ஸ்பெயின் நாட்டிற்கு முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு சென்றிருப்பதை நான் நம்பவில்லை,  குற்றச்சாட்டை வைப்பதை விட மாநில அரசு இதை தன்னிலை விளக்கமாக அறிவிக்க வேண்டும், இந்த யாத்திரையில் ஊழல் பற்றி கூறிக்கொண்டுஏற்படுத்தும்., மக்கள் பணம் எங்கே செல்கின்றது என்று, அதற்காக 2024 பாராளுமன்ற தேர்தல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், கனிமவளம் மூலம் ஆயிரம் கோடியிற்கு கீழ் தான் அரசிற்கு வருமானம் வருகிறது,  ஆனால் ஒரு லட்சம் கோடி மேல் கனிமவளம் வெளிநாடுகளுக்கு செல்கிறது, இந்த பணம் இருந்தால் நாட்டில் ஊழலை ஒழித்து விடலாம் என்று பேசி இருந்தார்.


மேலும் படிக்க | கள்ளுக்கடை, 5 மொழி கொள்கை வரும்.... டாஸ்மாக் படிப்படியா குறைப்போம் - அண்ணாமலை வாக்குறுதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ