பாஜகவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் G Kishan Reddy
எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.
புதுடெல்லி: எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது. தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பொறுப்பு ஜி கிஷன் ரெட்டி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அசாம் மாநில பொறுப்பாளராக நரேந்திர சிங் தோமர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரல்ஹாத் ஜோஷி, கேரளாவிற்கும், அர்ஜுன் ராம் மேக்வால் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக அண்மையில் பாஜகவின் தேசியத் தலைவர் திரு.ஜெ.பி.நட்டா அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். தமிழக பாஜக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் தேசிய தலைவர் திரு.ஜெ.பி.நட்டா, பாஜக- அதிமுக கூட்டணியை உறுதிபடுத்தினார்.
அப்போது, பாஜக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டத்திலும் அவர் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைய வைக்க பாஜகவால் மட்டுமே சாத்தியம் என்று தெரிவித்தார்.
Also Read | World 02 February 2021: இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR