Crime News in Tamil Nadu: சென்னை ஓட்டேரி பிரிக்கிளின் சாலை பகுதியில் வசித்து வருபவர் ராஜா என்கின்ற ரதி வயது 40. திருநங்கையான இவர் பாரதிய ஜனதா கட்சியில் பல ஆண்டுகளாக உள்ளார். பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாவட்ட தலைவியான இவர் நடந்து முடிந்த மாமன்ற தேர்தலில் 76 வது வார்டில் பாஜக சார்பாக நின்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் நேற்று இவர் தலைமைச் செயலக காலணி காவல் நிலையத் தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் பாஜகவில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவராக உள்ள கபிலன் என்பவர் எனக்கு அறிமுகமாகி அவரது பிஏ கடந்த சில நாட்களுக்கு முன்பு கபிலன் அழைக்கிறார் என்று கூறி எனக்கு போன் செய்தார். அதன் பிறகு நான் அங்கு சென்றதும் என்னிடம் அசிங்கமாக பேசி மேலே கையை வைத்து தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அவர்கள் குடிபோதையில் இருந்ததால் நான் அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து விட்டதாக கூறியுள்ளார். 


மேலும் படிக்க: விபச்சார தொழிலில் யார் NO.1 என்பதில் இளைஞர்கள் இடையே மோதல்!


அதன் பிறகு எனது வீட்டிற்கு அடிக்கடி ஆட்கள் வந்து என்னை மிரட்டி விட்டு செல்வதாகவும், இதுக்குறித்து நான் எனது கட்சி தலைமை அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாகவும், அங்கு அவரை விசாரணைக்கு அழைத்த போது அவர் அங்கு வரவில்லை. அதற்கு பதில் அடியாட்களை வைத்து என்னை மிரட்டுவ தாகவும் மேலும் கட்சியில் எனக்கு பதவி வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டுவதாகும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


எனவே எனக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும் என்றும் எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு பாஜக மாவட்ட தலைவர் கபிலன் தான் காரணம் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 


மேலும் இது தொடர்பாக பாஜக கட்சி தலைமை அலுவலகமான கமலாலய த்திலும் புகார் மனு அளித்துள்ளார். பாஜக கட்சியை சேர்ந்த திருநங்கை ஒருவர் மாவட்ட தலைவர் மீது புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க: தகாத உறவை கணவரிடம் போட்டு கொடுத்ததால் அரங்கேறிய சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ