புதுடெல்லி: தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இந்த இரு மாநிலங்களுக்கும் ஒரு நாள் பயணமாக வருகிறார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது வருகையின் போது அமித் ஷா "வெற்றிக் கொடி ஏந்தி" எனப்படும் விஜய் சங்கல்ப் மகாசமபர்க் அபியான் (Vijay Sankalp Mahasamaprk Abhiyaan) என்ற பிரசாரத்தைத் தொடங்குகிறார். சுசிந்திரம் (Suchindram) டவுனில் இந்த வீட்டுக்கு வீடு பிரசாரத்தை செய்கிறார் உள்துறை அமைச்சர். 



கன்னியாகுமரியில் பிரமாண்டமான சாலைப் பேரணி உட்பட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் அமித் ஷா கலந்து கொள்வார்.
அமித் ஷாவின் தமிழக பயண அட்டவணை:


தனது பயணத்தின் தொடக்கமாக முதலில் சுசிந்திரம் கோயிலுக்கு செல்லும் அமித் ஷா காலை 10.20 மணிக்கு வழிபாடு நடத்துவார்.  பின்னர் "வெற்றிக் கொடி ஏந்தி" பிரசாரத்தைத் தொடங்குவார், இது காலை 10.45 மணிக்கு சுசிந்திரம் (Suchindram) டவுனில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்வார்.  


Also Read | மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி


அதைத் தொடர்ந்து பிரம்மாண்டமான சாலைப்பேரணி நடைபெறும். இந்து கல்லூரியில் காலை 11.15 மணிக்கு "வெற்றிக் கொடி ஏந்தி" தொடங்கும் பேரணி, கன்னியாகுமரியில் உள்ள வேப்பமூடு காமராஜ் சிலையில் நிறைவடையும். 


மத்திய அமைச்சர் அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் பிற்பகல் 12.30 மணிக்கு உடுப்பி ஹோட்டலில் கலந்துரையாடுவார். பின்னர் அமித் ஷா அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்படும் அமித் ஷா தனது கேரள சுற்றுப்பயணத்தைத் தொடங்குவார்.  


தமிழக சட்டமன்றத்திற்கான மொத்தம் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  


Also Read | Commanders' Conference: கண்காட்சியில் ஆயுதப்படை ஆயுதங்களை பிரதமர் பார்வையிட்டார்   


அமித் ஷாவின் கேரள பயணத்தின் அட்டவணை: திருவனந்தபுரத்தில், ஷா முதலில் ஸ்ரீ பேலூர் மடத்திற்கு சென்று வழிபாடு செய்வார். மாலை 6 மணிக்கு ஷாங்குமுகத்தில் பாஜகவின் கேரள விஜய் யாத்திரையின் மோசமான செயல்பாட்டை உரையாற்றுவார். ஒரு முக்கிய குழு கூட்டமும் அன்றைய தினம் திட்டமிடப்பட்டுள்ளது. இரவு 10.30 மணியளவில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்படுவார்.


ஏப்ரல் 6 ம் தேதி கேரள மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 15 வது சட்டமன்றத்திற்கான தேர்தலில் மொத்தம் 2,67,88,268 வாக்காளர்கள், 40,771 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பார்கள். கேரளாவிலும் ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலில் மே இரண்டாம் தேதி பதிவான வாக்குகல் எண்ணப்படும்.


Also Read | திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று காலை கையெழுத்தாகிறது   


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR