பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலை ஜிம்கானா கிளப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காமராஜரின் பிறந்தநாள்..


தமிழகத்தின் மறக்க முடியாத தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் காமராஜர். இன்று இவரது 121ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு இடங்கிளலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாஜக மாநித்தலைவர் அண்ணாமலையும் காமராஜருக்கு இன்று மரியாதை செய்தார். பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 


மேலும் படிக்க | புதுக்கோட்டையில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு


காமராஜர் எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட வேண்டியவர்..


பத்திரிகையாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிதண்ணீர் குழாயில் வரவேண்டும் என்பது அவருடைய கனவு. அந்த கனவை பாரத பிரதமர் ஜல் ஜீவன் என்னும் திட்டத்தின் மூலம் நனவாக்கி இருக்கிறார். இந்தியா முழுவதும் அவர் கனவை நனவாக்கி வருகிறார் என்றார். மேலும், காமராஜர் ஒரு 360 டிகிரி முதலமைச்சர் என்றும் தமிழகத்தில் மட்டுமல்லாது காமராஜர் எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட வேண்டியவர் என்றும் அவர் குறிப்பிட்டார். 


மேகதாது குறித்து அண்ணாமலை..


அண்ணாமலை, “திமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை பற்றி கேள்வி எழுப்பியதற்கு, திமுக செய்யக்கூடிய அரசியலில் இதை ஒரு புது அரசியலாகதான்  பார்க்கிறேன். கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வரவில்லை என்பதுதான் அவர்களுடைய முதல் தீர்மானமாக இருந்திருக்க வேண்டும், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வரத்து இல்லை என்று அவர்கள் சொன்னதற்கு பிறகும் 17 மற்றும் 18 தேதிகளில் எதற்கு அவர்கள் கர்நாடகா செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். 


“மேக தாது அணை கட்டவே முடியாது என்கிற நிலையில் இருந்தும் காங்கிரஸ் ஆட்சி அதை கட்டியை தீர வேண்டும் என்று முயற்சி செய்கிறது. அதைப்பற்றிய தீர்மானங்கள் அதில் இல்லை. இவர்களது தீர்மானம் வரும் பொய்யும் புரட்டுமாக உள்ளது மத்திய அரசை குறை சொல்வதற்கு தான் இந்த தீர்மானங்களை போட்டிருக்கிறதா?” என்று திமுக கட்சியினரை கேள்வி கேட்டார். 


“தமிழே அறைகுறை..”


தொடர்ந்து பேசிய அண்ணாமலை, திமுக காரர்களுக்கு பெரும்பாலானோருக்கு ஆங்கிலமே தெரியாது என்றும் தமிழும் அரைகுறையாக தெரிவதாகவும் இந்தியும் சுத்தமாகத் தெரியாது அதனால் தான் ஒன்றுமே தெரியவில்லை என்றும் கூறினார். உதயநிதி குறித்து பேசிய அவர், “படத்தில் நடிப்பதை போன்று பத்திரிக்கையாளர் கேட்க கேள்விகளுக்கு சிரித்துக் கொண்டு பதில் சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின், மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கொஞ்சமாவது அவர்களை கேபினட்டில் இருப்பவர்களை ஆங்கிலமும், இந்தியும் தெரிந்தவர்களை வைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் என்ன பேசினார் என்று இவர்களுக்கு எதுவுமே தெரியாது. அதனால் தான் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். 


“ஜி.எஸ்.டியால்தான் இந்தியா வளர்ந்து வருகிறது..”


ஜிஎஸ்டி வரி குறித்து பேசிய அண்ணாமலை, “ஜிஎஸ்டி வந்த பிறகு இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது, தமிழகம் முன்னேறவில்லை என்றால் அதற்கு காரணம் ஜிஎஸ்டி இல்லை இங்கே இருக்கும் ஆட்சியாளர்கள் தான் 20, 30% கமிஷன் கேட்டால் எப்படி இங்கு தொழில்துறைகள் உள்ளே நுழையும்! அதனால் இவர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டுமே தவிர எல்லாவற்றிற்கும் மத்திய அரசை குறை கூறக்கூடாது” என்றார். 


மேலும் படிக்க | விடிந்த உடன் டாஸ்மாக்...? இதுதான் விடியல் அரசா... ஜெயக்குமார் சாட்டையடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ