திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நேற்று தேசத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் சுவாமி ஊர்வலம் வந்த போது நடனமாடியதில் இளைஞர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் நியூடவுன் பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் என்பவரை பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரான ஜனார்த்தனன் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் ஆத்திரமடைந்த விக்கிவின் சித்தப்பா சீனிவாசன் கத்தியால் ஜனார்த்தனை குத்தியதில் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி காயமைந்த ஜனார்த்தனை உடனடியாக இளைஞர்கள் மீட்டனர். மேலும் அதன் பின் அவரை அந்த இளைஞர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


மேலும் படிக்க | சாலையில் இறங்கி துணி துவைத்து, தவம் செய்த இளைஞரால் பரபரப்பு!


தற்போது இந்த சம்பவம் குறித்து நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து தற்போது பாஜக கட்சி நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்று ஜனார்த்தனை பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கத்தியால் குத்தியவரை கைது செய்ய வேண்டும் என பாஜக கட்சி நிர்வாகிகள் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தை 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு, திமுக பிரமுகரான சீனிவாசனை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனால் நகர காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததின் பேரில் பாஜக கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சீனிவாசன் மற்றும் ஜனார்த்தனன் நண்பரான சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .


வாணியம்பாடியில் கோவில் திருவிழாவின் போது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | சென்னை: பள்ளி மாணவியை கடத்த முயற்சி, கீழே குதித்து தப்பித்த மாணவி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ