சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தை சேர்ந்தவர் என தெரிவித்த கமல்ஹாசன் மீது பாஜக-வினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் வரும் மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அங்கு பிரசாரம் செய்தார்.
 
பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என தெரிவித்தார்.


இதைத்தொடர்ந்து கமலின் இந்த கருத்திற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் "எப்படி கலைக்கு மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்திற்கும் மதம் கிடையாது" என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.


இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது தமிழக தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா புகார் மனு அளித்துள்ளார். 


அரவக்குறிச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி கமல்ஹாசன் பேசியுள்ளார். அவரது தேர்தல் பிரசாரத்துக்கு குறைந்தது 5 நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும், கமல் மீது வழக்கு பதிவு செய்யவும், மேலும் அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரியும் அவர் அளித்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.