திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டிப் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் , அய்யங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த விக்கி (21), பிரேம்குமார் (20) மற்றும் யோகேஸ்வரன் (20) ஆகிய 3 பேரும் போதையில் ஆபாச வார்த்தைகளைப் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் கடைவீதியில் துணிக்கடைக்கு எதிரே பெரும் ரகளையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அலறி ஓடியதால் பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மாவட்ட செயற்குழு உறுப்பினர்  பரணி என்பவர் இதனை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. 


மேலும் பரணி தகராரில் ஈடுபட்டவர்களிடம் பொது இடங்களில் கத்தியைக் காட்டி மிரட்டுவது தவறு என்று பேசியதாகவும் அப்போது அங்கு மது போதையில் பிரச்சனை செய்து கொண்டிருந்த விக்கி, பிரேம்குமார் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் பரணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கண்மூடித்தனமாக அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 


ஒரு கட்டத்தில் பிரச்சனை முற்றி விக்கி என்பவன் தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பரணியை சராமாரியாக வெட்டியதால் அவர் அலறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரேம்குமார் மற்றும் யோகேஸ்வரன் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.


ALSO READ | பொறி பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு..! திமிரும் காளைகள்.. சீறும் காளையர்கள்


சம்பவம் பற்றி தெரியவர மக்கள் கூட்டமாக கூடியதையடுத்து அங்கிருந்து போதையில் இருந்த இளைஞர்கள் விக்கி, பிரேம் குமார், யோகேஸ்வரன் ஆகிய 3 பேரும் தப்பியோடியுள்ளனர். தகவலறிந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டதோடு வழக்கு பதிவு செய்து பிரேம்குமார் என்பவனை கைது செய்து நிலக்கோட்டை நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்துள்ளனர். 


மேலும் தப்பியோடிய  காவல்துறையினரால் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் விக்கி மற்றும்  யோகேஸ்வரன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றன. விக்கி என்பவன் அப்பகுதியில் வளர்ந்து வரும் ரெளடி என்றும் 10-ற்கும் மேற்பட்ட வழக்குகள் அவன் மீது உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


மேலும் காயப்பட்ட பாஜக-வைச் சேர்ந்த பரணி என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசியல் பிரமுகர்களுக்கே இந்த நிலை என்றால் அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பு கேள்வி குறிதான் என்று சமூக ஆர்வர்களால் கருத்து முன்வைக்கப்படுகிறது. இவர்களைப் போன்றவர்கள் மீது காவல்துறை (TN Police) தனிக்கவனம் செலுத்தி , கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ALSO READ | பேக்கரி ஊழியருக்கு அரிவாள் வெட்டு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR